இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

BB 8 Update
BB 8 Update
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on: 

பிக்பாஸ் சீசன் 8ல் இந்த வாரம் எவிக்ஸன் குறித்தான அப்டேட் வெளியாகியிருக்கிறது. இறுதி நேரத்தில் மீண்டும் ஒருவர் தப்பித்திருக்கிறார். யாரென்று பார்ப்போமா?

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. போன சீசனில் எப்படி பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் இப்போது ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர். இந்த இரு டீமுக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து ரவீந்திரன், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் எவிக்ட் செய்யப்பட்டனர். இதனையடுத்து ஒரு வாரம் நோ எவிக்ஸன் மற்றும் வைல்டு கார்டு என்ட்ரி நடைபெற்றது. இதன்மூலம் 6 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இவர்களில் ரியா கடந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்டார்.

இதனையடுத்து வார இறுதியில் விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்திப்பார். அதேபோல் வாரம் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார். இந்த வாரத்தின் தலைவராக மஞ்சரி தேர்வு செய்யப்பட்டார். பின் இந்த ஏழாவது வாரத்திற்கான நாமினேஷனில் முத்து, வர்ஷினி நேரடியாக நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதற்குப்பின் அருண், ராணவ், சிவா, விஷால், சாச்சனா, சௌந்தர்யா ராணவ் நாமினேட் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?
BB 8 Update

இந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. வழக்கம்போல் கலவரத்திற்கு மத்தியில் போட்டிகள் முடிந்தன. அந்தவகையில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த வாரம் மிக குறைவான வாக்குகளை சிவகுமார், சாச்சனா ஆகியோர் பெற்றிருந்தனர். ஆண்கள் அணி நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க் வெற்றிபெற்றதால், சிவாவை காப்பாற்றிவிட்டார்கள். ஆகையால் சாச்சனா எலிமினேட் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கடைசி நேரத்தில் வர்ஷினி தான் எலிமினேட் ஆகி இருக்கிறார். இந்த முறையும் சாச்சனா தப்பித்து விட்டார்.

ஆகையால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். இன்னும் எத்தனை நாள்தான் சாச்சனாவை காப்பாற்றுவீர்கள் என்று கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com