Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj 
வெள்ளித்திரை

லோகேஷ் கனகராஜ் கருங்காலி மாலை போடுவதற்கு இதுதான் காரணம்... அவரே சொன்ன தகவல்!

விஜி

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் ஏன் கருங்காலி மாலை அணிந்திருக்கிறேன் என்ற விளக்கத்தை கொடுத்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது 5 படங்களிலேயே அசைக்க முடியாத இடத்தை பிடித்து விட்டார். வெறும் லோகேஷ் யுனிவெர்ஸில் 10 படங்கள் மட்டுமே இயக்கப்படும் என அறிவித்த அவர் 2 படங்கள் விஜய்யை வைத்தும், ஒரு படம் கமலை வைத்தும், ஒரு படம் கார்த்தியை வைத்தும், முதல் படம் மாநகரத்தையும் இயக்கி அசத்தினார்.

இவரின் அனைத்து படங்களும் ஹிட்டடித்த நிலையில், தற்போது அனைத்து சோஷியல் மீடியாவில் இருந்து விலகி ரஜினி படத்தை இயக்குவதாக அறிவித்தார். ஆனால் திடீரென நடிப்பு பக்கம் எண்ட்ரி கொடுத்த அவர், ஏற்கனவே சிங்கப்பூர் சலூன் படத்தில் கேமியோ ரோலில் வந்தார். தொடர்ந்து தற்போது இனிமேல் ஆல்பத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக நடித்து ரொமான்சில் கலக்கினார். சமீபத்தில் தான் இந்த பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்த நிலையில், ஸ்ருதிஹாசன் ஜோடியாக லோகேஷ் நடித்துள்ள இனிமேல் என்கிற ஆல்பம் பாடலை புரமோட் செய்யும் விதமாக யூடியூப்பர்களான விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோருடன் ஒரு ஜாலியான நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார் லோகேஷ். அப்போது பேசிய அவர், தான் கருங்காலி மாலை போட்டதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

இவர்கள் கருங்காலி மாலை போட்ட பிறகு தான் இந்த கலாச்சாரம் ட்ரெண்டானது என்பது பலருக்கும் தெரியும். நேர்காணலில் பேசிய லோகேஷ், ஒருமுறை விக்ரம் பட ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும் போது விபத்தில் சிக்கினாராம். அப்போது அவரது நண்பரான கலை இயக்குனர் சதீஷ் என்பவர் தான் கருங்காலி மாலையை வாங்கிக் கொடுத்து இதை அணிந்துகொள் இது உன்னை சுற்றியுள்ள நெகட்டிவிட்டியை குறைக்கும் என சொல்லி கொடுத்தாராம். நண்பன் ஆசையாக வாங்கிக் கொடுத்தது என்பதால் அதை அணிந்திருப்பதாகவும் மற்றபடி அதன் மீது தனக்கு நம்பிக்கை எதுவும் இல்லை என்றும் லோகேஷ் கனகராஜ் கூறி உள்ளார்.

அர்த்தநாரீஸ்வரராக அருளும் தட்சிணாமூர்த்தி எங்கு காட்சி தருகிறார் தெரியுமா?

ஹைலூரோனிக் அமிலம் என்றால் என்னவென்று தெரியுமா?

செவித்திறன் பாதிப்புகளும் நிவாரணமும்!

உங்க ஸ்மார்ட்போன் மெதுவா சார்ஜ் ஏறுதா? அதற்கான தீர்வு இதோ! 

மரங்கள் சூழ வாழ்வதில் கிடைக்கும் நன்மைகளை அறிவோமா?

SCROLL FOR NEXT