வெள்ளித்திரை

‘அதன் பிறகு சினிமாவிலிருந்து விலகி விடுவேன்’ லோகேஷ் கனகராஜ் அதிரடி!

கல்கி டெஸ்க்

மிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்றவை வெற்றிப் படங்களாக அமைந்தன. மேலும், அந்தப் படங்களில் தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்களான கமல், விஜய், கார்த்தி, விஜய் சேதுபதி போன்றவர்கள் நடித்தது அவரை நட்சத்திர இயக்குநர் அந்தஸ்துக்கு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்தப் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக திரிஷா, பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இடம்பெற்றிருக்கிறது. இந்தப் படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல் காட்சி ஒன்று மிகவும் பிரம்மாண்டாகப் படமாக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் முதல் பாடலான, ‘நா ரெடி’ பாடலை அந்தப் படக்குழு வெளியிட இருக்கிறது.

இந்த நிலையில், ஒரு யூ-டியூப் சேனலுக்கு பேட்டி அளித்த லோகேஷ் கனகராஜ், ‘நிறைய திரைப்படங்கள் இயக்க வேண்டும், நீண்ட காலம் இந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. இன்னும் பத்து படங்களை இயக்கிய பிறகு திரைப்படம் இயக்குவதையே நிறுத்தி விடப்போவதாக’ கூறி இருக்கிறார். மேலும் அவர், ‘எல்சியு கான்செப்டுக்குக் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், அடுத்தடுத்த தனது படங்களில் அந்த வரவேற்பு குறையாத அளவுக்கு பொறுப்புடன் செயல்பட இருப்பதாகவும்’ கூறி உள்ளார். ‘லியோ’ படப்பிடிப்புக்காக காலை ஒன்பது மணிக்கு படப்பிடிப்பு என்றால் ஏழு மணிக்கே படப்பிடிப்பு தலத்துக்கு வரும் அவரது உழைப்பு தன்னை மிகவும் பிரமிக்க வைப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறி இருக்கிறார்.

மகாலட்சுமி தாயாருக்கு தீபாவளி சீர் கொடுக்கும் ஆலயம் எங்குள்ளது தெரியுமா?

சந்தையில் வலம் வரும் போலி பனீர்… ஜாக்கிரதை மக்களே! 

தார்வாட் பேடா: கர்நாடகாவின் சுவை நிறைந்த இனிப்பு!

நாங்கள் கொண்டாடிய சாகச தீபாவளி!

நாக்கில் உள்ள புண்ணை விரைவில் குணப்படுத்தும் வீட்டு வைத்திய முறைகள்! 

SCROLL FOR NEXT