தமிழில் வெற்றிபெற்ற படமான லவ் டுடே இந்தியில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. கதையைக் கேட்டதும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் மகன் ஜீனைத்தும், நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரும் ஒகே சொல்லிவிட்டனர். அந்த அளவிற்கு பிரதீப் ரங்கநாதன் – இவானா கதாபாத்திரங்கள் பிடித்துப்போயுள்ளன.
லவ் டுடே படத்தில், காதலர்கள் தங்கள் செல்போனை ஒரு நாள் மாற்றிக்கொள்ள வேண்டும். அதன் பிறகும் அவர்கள் காதல் நிலைத்திருந்தால் திருமணம் என இவானாவின் தந்தையாக நடித்த சத்யராஜ் கூறுவார். இப்படம் பார்த்த பலர் வீடுகளில் ரகளையோ ரகளை. இப்போது இந்தி ரீமேக் செய்து வட இந்தியாவிலும் ஒரு ரவுண்டு ரகளை செய்யப்போகிறார்கள்.
அமீர்கான் மகன் மகன் ஜீனைத் மற்றும் ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூருக்கும் இது இரண்டாவது படமாகும்.
ஜோயா அக்தரின் ’ஆர்ச்சிஸ்' படம் மூலம் குஷி கபூர் மட்டுமல்ல, ஷாருக்கானின் மகள் சுஹானா, அமிதாபச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா ஆகியோரும் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
(சினிமா தலைமுறை வளரட்டும்)