லலிதம் சுந்தரம்
லலிதம் சுந்தரம் 
வெள்ளித்திரை

மஞ்சு வாரியரின் அருமையான குடும்பத் திரைப்படம்: லலிதம் சுந்தரம்!

தனுஜா ஜெயராமன்

திரைப்படம் - லலிதம் சுந்தரம்
டைரக்டர் - மது வாரியார்
தயாரிப்பு - மஞ்சு வாரியர் , கோச்சுமோன்

பல ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த அருமையான முழுநீள குடும்பத் திரைபடம் எனலாம்.  இந்த வருடம் மார்ச் மாதம் வெளியான இந்த மலையாள திரைப்படம் தற்போது மொழிமாற்ற திரைப்படமாக தமிழில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில்  கிடைக்கிறது.

இறந்து போன தனது தாயின் விருப்பத்திற்கிணங்க தனியாக வசிக்கும் தந்தையை காண சொந்த ஊருக்கு  வரும் முன்று பிள்ளைகளைக் கிடையேயான ஈகோக்கள் , மனஸ்தாபங்கள் , சிறு சண்டைகள் என நமது குடும்பத்தை நினைவுகொள்ள வைக்கிறது திரைக்கதை. தந்தையாக ரகுநாத் பலேரி தனது காதாபாத்திரத்தை நிறைவாக செய்கிறார்.

பெரிய மகனாக பிஜூமேனன் வழக்கம் போல தனது நடிப்பில் முத்திரை பதிக்கிறார். தங்கையாக வரும் மஞ்சுவாரியர் நடிப்பும் அமர்க்களம். அசுரனில் அம்மாவாக நடித்தவரா என வியக்கவைக்கிறார். கடைக்குட்டி தம்பியாக அனுமோகன் நடித்திருக்கிறார். மகன்களின் ஜோடிகளாக வரும் ரம்யா நம்பீசன் மற்றும் தீப்தி சதி என இருவருமே தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஞாயம் செய்திருக்கிறார்கள்.

மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியாரின் கணவராக வரும் சைஜூ குரூப் அலட்டலில்லாத மெச்சூர்ட் நடிப்பு. குட்டீஸ் இருவரும் க்யூட் ரகம். ஒரே வீட்டில் பிறந்து வளர்ந்தாலும் ஒவ்வொருவரும் வெவ்வேறுமாதிரியானவர்கள்..தனித்தன்மையானவர்கள்..வெவ்வேறு திறமை கொண்டவர்கள் என புரிந்து கொள்ள முடிகிறது.

சாதாரணமாக தனது தாயின் நினைவுநாளுக்கு வரும் மூன்று பிள்ளைகளின் குடும்பங்களுக்கு இடையேயான நிகழ்வுகளே கதை. தனது தொடர்ந்த தொழில் தோல்விகளின் இறுக்கம் முகத்தில் தெரிய தனது தங்கையின் வெற்றியை எள்ளி நகையாடும் ஈகோவை ப்ரமாதமாக முகத்தில் காட்டி நடிக்கிறார் பிஜூமேனன்.

நமது உடன்பிறப்புகளின் வெற்றி மற்றும் தோல்விகள் மற்ற உடன்பிறப்புகளை எப்படி பாதிக்கிறது என புரிகிறது. அதை கண்டு பெற்றவர்களின் தர்மசங்கடம் என கதை சாதாரண குடும்ப நிகழ்வுகளை ப்ரதிபலிக்கிறது.

லலிதம் சுந்தரம்

அனைவரும் கேரக்டரை உள்வாங்கி அநாவசியமாக நடித்து தள்ளுகிறார்கள். சைஜூ குரூப் " யாரும் பர்பெக்ட் ஆனவர்கள் இல்லை" என மஞ்சுவாரியாருக்கு புரிய வைக்கும் இடம் அருமை. குடும்பம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என போகிற போக்கில் அழகாக பதிவு செய்திருக்கிறார்கள்.

கேரளாவின் கொள்ளை அழகு நம்மை சுண்டி இழுக்கிறது. மொத்தத்தில் அழகான குடும்ப திரைப்படத்தை நெடுநாள் கழித்து பார்த்த நிறைவு மனதில் எழுகிறது . திரைப்படம் பார்க்கும் போதே நமது குடும்பம் நினைவில் வருவது படத்தின் வெற்றி. பல இடங்களில் மகிழ்ச்சியும்,துக்கமும்,  ஏக்கமும் மாறி மாறி வந்து போகிறது.

குடும்பத்துடன் கண்டு மகிழ வேண்டிய குடும்ப சித்திரம். இயல்பான அலட்டலில்லாத ஆர்பாட்டமில்லாத அழகியல் கவிதை.

நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது!

நேற்றைய சராசரிகள் இன்றைய சக்கரவர்த்திகள்!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க ஆய்வுகள் கூறும் தகவல்கள்!

முக்தி துவாரகா! (பால்கா மந்திர்)

மனம் வறண்டு போகும்போது மழை நீரில் மீன் பிடித்தால்?

SCROLL FOR NEXT