Deepak Parambol & Aparna Das 
வெள்ளித்திரை

Manjummel Boys நடிகரை கரம்பிடிக்கும் அபர்ணா தாஸ்!

பாரதி

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் சுதி கதாப்பாத்திரத்தில் நடித்த தீபக் பரம்போலை இந்த மாதம் இறுதியில் காதல் திருமணம் செய்யவுள்ளார் அபர்ணா தாஸ்.

டாடா படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டவர் தான் அபர்ணா தாஸ். கேரளாவைச் சேர்ந்த இவர் 2018ம் ஆண்டு வெளியான 'நஞ்சன் பிராகஷன்' என்றப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் 'மனோஹரம்' படத்தின் மூலம் மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 2022ம் ஆண்டு 'பீஸ்ட்' படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குனர் நெல்சன் அபர்ணா தாஸை மலையாள சினிமாவிலிருந்து தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்தார். ஆக, தமிழ், மலையாள, தெலுங்கு ஆகிய சினிமாக்களில் தற்போதுத் தொடர்ந்து கமிட்டாகி உள்ளார்.

இந்தநிலையில் தான் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த தீபக் பரம்போலை அபர்ணா தாஸ் வரும் ஏப்ரல் 24ம் தேதி திருமணம் செய்யவுள்ளார். மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் ஆரம்பத்திலிருந்து படம் முடியும் வரை கதையில் முக்கிய நபராகப் பயணித்திருப்பார், தீபக்.

Deepak parambol in manjumel boys

சுபாஷை குட்டான் தூக்கும்போது குகைக்குள் குட்டான் தெரிவிக்கும் தகவல்களை வெளியிலிருப்பவர்களுக்கு சொல்வதில் முக்கிய பங்கு வகித்தவர் தீபக். இதுதான் மஞ்சுமெல் பாய்ஸ் நண்பர்கள் கூட்டத்தில் தீபக் ரசிகர்களுக்குத் தனியாக தெரிய காரணமாயிருந்தது. இவர் 2010ம் ஆண்டு 'மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் கிட்டத்தட்ட 40 படங்களில் நடித்த இவர் அபர்ணா தாஸுடன் மனோஹரம் படத்தில் இணைந்து நடித்தார்.

அந்தப் படத்தின் மூலம்தான் காதலர்களாகியிருப்பார்கள் என்று ரசிகர்கள் பேசிகின்றனர். ஏனெனில் அதன்பின்னர் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. ஆனால் இது காதல் திருமணம் என்பது மட்டும் அறிவிக்கப்பட்டது. இவர்களின் திருமணப் பத்திரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து மலையாளம் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ரோபோ சங்கர் மகள், வரலட்சுமி சரத்குமார் வரிசையில் தற்போது அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரம்போலும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

SCROLL FOR NEXT