Ultimate spider man img1.hotstarext.com
வெள்ளித்திரை

மார்வலின் அடுத்த காமிக் புத்தகமான ‘Ultimate spider man’ வெளியானது.. ரசிகர்கள் உற்சாகம்!

பாரதி

மெரிக்காவில் சூப்பர்ஹீரோ மற்றும் சூப்பர்வுமன் கதைகளுக்கு பெயர்போன மார்வல் நிறுவனம் தற்போது ஜோனத்தன் எழுதிய Ultimate spider man என்ற புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து Ultimate spider man என்ற ஹேஷ்டேக் x தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

மார்வலின் புதிய புத்தகமான Ultimate spider man புத்தகம் நேற்று அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் வெளியானது. இதனால் மார்வல் ரசிகர்கள் உற்சாகமான நிலையில் மார்வல் நிறுவனம் அந்த புத்தகத்தை இப்போதைக்கு இணையத்தில் வெளியிட முடியாது என்று கூறியது ரசிகர்களை சோர்வடைய செய்தது.

இதுவரை கிட்டத்தட்ட 32 ஆயிரம் காமிக் புத்தகங்களை மார்வல் வெளியிட்டிருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மார்வல் காமிக் தனது ரசிகர்களாக்கிவிட்டது என்றே கூறலாம். மார்வலின் முதல் காமிக் புத்தகமான ஸ்டான்லீ எழுதிய ‘மார்வல் காமிக்’ என்ற புத்தகம் 1939ம் ஆண்டு அக்டோபர் மாதம் பல்ப் நாளிதழில் வெளியிடப்பட்டது. இதில் முக்கிய கதாப்பாத்திரங்கள் Human torch, Sub- marine, the angel, ka-zar மற்றும் Masked raider ஆகியவையாகும்.

அதன்பின்னர் 1961ம் ஆண்டு எழுத்தாளர் ஸ்டான்லீ மற்றும் ஓவியர் ஜாக் கிர்பை ஆகியோரால் உருவாக்கப்பட்ட Journey in to mystery என்ற புத்தகத்தால் காமிக் கதைகள் பிரபலமாகத் தொடங்கியது. வெளிவந்த அனைத்து மார்வல் புத்தகங்களும் உலகளவில் மிகவும் பிரபலமானது. இதனுடைய வெற்றிக்கு முதல் காரணம் ஓவியங்களே. இந்த மார்வல் ‘காமிக் உலகத்தில்’ கிட்டத்தட்ட 80 ஆயிரம் கதாப்பாத்திரங்கள் உள்ளன.

மார்வல் காமிக் புத்தகங்களின் வெற்றியைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு முதல் முறை Iron man என்ற கதாப்பாத்திரத்தை வைத்து படம் வெளியானது. இது உலகளவில் மார்வலை இன்னும் பிரபலமாக்க செய்தது. கேப்டன் அமெரிக்கா, வாண்டா, ஸ்பைடர் மேன், விஷன், தோர், ஹாக்கே, கமோரா, ஹல்க், தேனோஸ் போன்ற நிறைய கதாப்பாத்திரங்கள் பயன்படுத்தி இதுவரை 33 படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

காமிக்கின் முதல் எழுத்தாளரான ஸ்டான்லீயிலிருந்து இன்று வரை நிறைய எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். இப்போது நிக் க்ளின் (தோர்), ஜான் பஜால்டுவா ( ரெட் கோப்லின்), மார்டின் கோக்கோலா ( டெட் பூல்), ஜாவியர் கேர்ரான் ( அவஞ்சர்ஸ்) என சென்ற ஆண்டு 12 எழுத்தாளர்கள் புத்தகம் வெளியிட்டனர். 36 ஆயிரம் புத்தகங்களில் அதிக புத்தகம் எழுதியது ஸ்டான்லீ, ஜாக் கிர்பை, ஸ்டீவ் டிட்கோ, கிறிஸ் க்ளேர்மோன்ட் மற்றும் பலர்.

இந்தநிலையில் நேற்று வெளியான Ultimate spider man புத்தகத்தை எழுதியவர் ஜோனத்தன் ஹிக்மேன் . இவர் 20 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். இந்த Ultimate spider man புத்தகத்தில் ஒரு புது நீல நிற ராட்ச உருவம் கொண்ட ஸ்பைடர் மேனை அறிமுகம் செய்திருப்பாதகவும் நகைச்சுவைக்கும் ஆக்ஷனுக்கும் பஞ்சமே இருக்காது எனவும் கூறியிருக்கிறார், ஜோனத்தன்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT