சர்வைவல் த்ரில்லர் படம் 
வெள்ளித்திரை

மாஸ்டர் மகேந்திரனின் சர்வைவல் த்ரில்லர்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!

விஜி

மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை பிரபல 4 திரைப்பட இயக்குனர்கள் தொடங்கி வைத்தனர்.

சனா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக ’புரொடக்ஷன் நம்பர்.1’ என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் சீமான், சரண், அருண்ராஜா காமராஜ் மற்றும் கல்யாண் உள்ளிட்ட கோலிவுட்டின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநர்கள் நான்கு பேர் சனா ஸ்டுடியோஸின் முதல் தயாரிப்பைத் தொடங்கி வைத்துள்ளனர். பிரமாண்டமாக பூஜையோடு தொடங்கிய இந்த விழாவில் படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்பு ஸ்ரீகாந்த் நடித்த ’எக்கோ’ படத்தை இயக்கிய நவின் கணேஷ் இயக்கும், இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம் சர்வைவல் த்ரில்லராக உருவாக இருக்கிறது. முத்து, சந்தோஷ் சிவன், ரவி இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்க, ஜீவிதா இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் சார்லி, கும்கி அஸ்வின், கலக்கப்போவது யாரு புகழ் சரத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-க்கு இசை ஏற்பாட்டாளராக இருந்த அபிஷேக் ஏஆர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதற்கு முன்பு அவரது இசையில் உருவான ‘கேம் ஆன்’ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இந்த படத்திற்கு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். அவருடைய ஒளிப்பதிவில் சமீபத்தில் வெளியான 'தூக்குதுரை' படம் ஒளிப்பதிவுக்காக பரவலான பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ‘சிவகுமாரின் சபதம்’ மற்றும் ’ரவுடி பேபி’ படங்களுக்கு படத்தொகுப்பு செய்த தீபக் இதில் எடிட்டராக பணிபுரிகிறார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT