SK 21 Amaran
SK 21 Amaran  
வெள்ளித்திரை

சிவகார்த்திகேயனின் அமரன் படத்துக்கு தடை கோரி வெடிக்கும் போராட்டம்!

விஜி

சிவகார்த்திகேயனின் அமரன் படத்திற்கு தடை கோரி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக பொங்கலுக்கு அயலான் திரைப்படம் வெளியானது. சயின்ஸ் பிக்‌ஷனாக உருவாக்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றது.

சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK 21 படத்தில் நடித்து வருகிறார். ராணுவ வீரராக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த படத்தின் டைட்டிலும், டீசரும் வெளியானது. காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகவும், மதக்கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாகவும் கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டம் வெடித்துள்ளது. திருநெல்வேலி கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயனின் உருவ பொம்மை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பல இடங்களில் போராட்டம் நடைபெற்றுவருவதால் அமரன் படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

படமே ரிலீசாகாத நிலையில், படத்தை முடிவு செய்து தவறாகும் என்றும், முழு படத்தை பார்த்தால் தான் புரியும் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுப்பாலினத்தவர்களை மனநோயாளிகள் என்று அறிவித்த நாடு… வெடித்தது சர்ச்சை!

தாய்மையை எதிர்நோக்கும் பெண்களைத் தாக்கும் தைராய்டு பிரச்னையை தடுப்பது எப்படி?

நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது!

நேற்றைய சராசரிகள் இன்றைய சக்கரவர்த்திகள்!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க ஆய்வுகள் கூறும் தகவல்கள்!

SCROLL FOR NEXT