Indian 2 
வெள்ளித்திரை

வெளியானது இந்தியன் 2 காதல் பாடல்... டாப் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றது!

விஜி

இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 2வது பாடலும் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் தான் இந்தியன். பல ஆண்டுகள் கழித்து அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்பொழுது எடுத்து முடித்திருக்கிறார் இயக்குனர் சங்கர். மேலும் இந்தியன் 2 திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி உலக அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல எதிர்வரும் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர் அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது.

கமல்ஹாசனும் இயக்குனர் ஷங்கரும் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம் இந்தியன். கடந்த 1996-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின் தற்போது சுமார் 18 ஆண்டுகள் கழித்து அவர்கள் இருவரும் இந்தியன் 2 படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான "பாரா" என்கின்ற பாடல் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. தொடர்ந்து இன்று காலை 2வது பாடல் வெளியாகி டாப் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். தாமரை எழுதியுள்ள இப்பாடல் சித்தார்த் - ரகுல் ப்ரீத் சிங்கிற்கு இடையிலான ரொமான்டிக் மெலடி பாடலாக உருவாகியுள்ளது. ஆம்பல், மெளவல் என சிவாஜி படத்தில் இடம்பெற்றுள்ள வரிகளை போலவே இந்த பாடலிலும் தாமரை வரிகளை தூவி விட்டுள்ளார். அனிருத் இசையும், தாமரை எழுத்தும் ஒன்றாக இணைந்து காதலர்களை மெய்சிலிர்க்க செய்யும் வகையில் பாடல் அமைந்துள்ளது. ஷங்கர் படத்தின் பாடல்கள் என்றாலே பிரம்மாண்டமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் சாதாரண ரொமாண்டிக் பாடல் என்றாலும் ஆஸ்திரேலியா, அண்டார்டிகா என சென்று விடுவார். சாதாரண கஃபே பாடல் போல இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

நீலோற்பம் நீரில் இல்லை என்று தொடங்கும் இந்த பாடல் சில நாட்களில் வைரலில் இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT