லிங்கா - ஆர். எஸ்.கார்த்தி 
வெள்ளித்திரை

ரத்தம் -வன்முறை -வக்கிரம்! 'பரோல்' திரைப்படம்!

ராகவ்குமார்

ரத்தம், பழி வாங்கல், என வட சென்னை பின்னணியில் துவாரக் ராஜ் இயக்கத்தில் வந்துள்ள படம் பரோல். நடுவில் கொஞ்சம் அம்மா செண்டிமெண்ட்.

கரிகாலனும், (லிங்கா ) கோவலனும் (ஆர். எஸ்.கார்த்தி ) அண்ணன் தம்பிகள். அண்ணனுக்கு அதிகமான பாசத்தையும், தம்பிக்கு குறைவான பாசத்தையும் வழங்குகிறார் அம்மா. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்.

லிங்கா

தம்பி கோவலன் கரிகாலன் சிறு வயதிலேயே சிறார் சிறைக்கு செல்கிறான். அங்கே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறான். இதன் வன்மங்களை மனதில் சேர்த்து வைத்து வெளியில் வந்து வட சென்னையின் கூலிப்படை ஆளாகிறான்.

ஆர். எஸ்.கார்த்தி

ஒரு வழக்கில் கைதாகி சிறைக்கு செல்கிறான். அம்மா இறந்து விடவே, அம்மாவின் ஆசைப்படி வெளியில் வந்து அம்மாவுக்கு ஈம காரியங்கள் செய்ய நினைக்கிறான் அண்ணன் கரிகாலன். அண்ணனை சிறையிலிருந்து வெளியில் பரோலில் கொண்டு வர நீதிமன்றத்தை நாடுகிறார் தம்பி கோவலன்.

பரோல் கிடைப்பதற்கு ஏற்படும் சிக்கல்களை படமாக தந்துள்ளார் டைரக்டர். பொதுமக்கள் அதிகம் அறிந்திராத பரோல் பற்றி சொன்னதற்காக டைரக்டரை பாராட்டலாம். ஆனால் பரோல் பற்றி சொன்னதை விட ரத்தத்தையும் வன்முறையையும் காட்டியதுதான் அதிகம்.

படக்குழுவினர்

பெரும்பான்மையான காட்சிகளில் யாரையாவது ஒருவர் கொலை செய்கிறார். மிகவும் அருவருப்பான முறையில் கொலை செய்கிறார்கள்.

கடைசி காட்சியில் நல்லவர்களாக திருந்தி விடுகிறார்கள் லிங்கா, ஆர் எஸ். கார்த்தியின் உடல் மொழியும் நடிப்பும் இது வரை ரசிகர்கள் பார்த்திராதது நிஜமான அண்ணன் தம்பிகளை போலவே நடித்திருக்கிறார்கள்.

அம்மாவாக நடிக்கும் ஜானகி சுரேஷ் யதார்த்தமான அம்மாவை நினைவு படுத்துகிறார் வக்கீலாக வினோதினி வைத்தியநாதன் சரியான தேர்வு.

பரோல்

ராஜ் குமார் அமலின் இசை படத்தின் போக்கை சஸ்பென்ஸ் திரில்லர் படம் போன்று மாற்றுகிறது. யதார்த்தம் என்ற பெயரில் வன்முறையை காட்சிப்படுத்தி உள்ளார்கள்.

வட சென்னை என்றாலே வன்முறைதான் டைரக்டர்களுக்கு நினைவுக்கு வருமா? உழைக்கும் பாட்டாளி மக்கள் நினைவுக்கு வர மாட்டார்களா?

பரோல் -ரத்தம் -வன்முறை -வக்கிரம்.

இது தெரிஞ்சா இனி நீங்க பிரட் சாப்பிடவே மாட்டீங்க! 

லடாக் பயண தொடர் 5 - ஐந்து நிமிடங்களுக்கு மேல் இங்கே நிற்க அனுமதி இல்லை... அப்படி நின்றால்...?

முகத்தில் உள்ள ப்ளாக் ஹெட்ஸ் நீங்க இயற்கை வழிமுறை!

சேதமடைந்த மரப்பொருட்கள்... குப்பைகளாக உங்கள் வீட்டில் உள்ளதா? அச்சச்சோ தவறாச்சே...!

குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!

SCROLL FOR NEXT