வெள்ளித்திரை

PS 2 நான்கு நாட்களில் இவ்வளவு வசூலா?

கல்கி டெஸ்க்

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார். முதல் பாகம் கடந்த ஆண்டுசெப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்துத் தயாரித்திருந்த இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், லால் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்திவந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய்நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார்பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

இதனையடுத்து நேற்று முன் தினம் வெளியாகியுள்ள அதன் இரண்டாம் பாகம் அந்தவசூல் சாதனையை முறியடிக்குமா? என்ற கேள்வி பலரிடையேயும் எழுந்துள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 வெளி வந்து நான்கு நாட்கள் முடிவடைந்துள்ளது. அந்தவகையில் இரண்டு நாட்களில் உலகளவில் இப்படம் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இருப்பினும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட நான்கு நாட்கள் வசூலில் இரண்டாம் பாகம் வசூலில் சற்று குறைவு தான் என தகவல் தெரிவிக்கின்றன.

படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் முதல் நாளில் இந்தியாவில் ரூ.30 கோடி முதல் ரூ.32 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் படம் ரூ.18 கோடி முதல் ரூ.20 கோடி வரைவசூலித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.இந்நிலையில் படம் உலகம் முழுவதும் நான்கு நாட்களில் ரூ.200 கோடியை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பல்லிகள் இங்கு சத்தமிடுவதில்லை; கருடன் வானில் பறப்பதில்லை! எங்கு தெரியுமா?

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

SCROLL FOR NEXT