ரஜினி - ஃபஃப 
வெள்ளித்திரை

ஒரே ஃப்ரேமில் இரு மாஸ் ஹீரோஸ்.. வைரலாகும் போட்டோ!

விஜி

வேட்டையன் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்தும், பகத் பாசில் ஆகிய இருவரும் ஒரே ஃப்ரேமில் நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 170வது படத்திற்கு வேட்டையன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாஸ் வெற்றியடைந்த நிலையில், அதன் வசூல் எக்கச்சக்கமாக எகிறியது. இதனையடுத்து ரஜினிகாந்தின் அடுத்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல் தலைவர் 170 படத்தை எழுதி இயக்குவதால் இப்படத்தின் கதை எப்படிப்பட்டதாக இருக்கும் என பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

அனிருத் இசைமைக்கும் இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் ஃபகத் ஃபாசில், நடிகைகள் மஞ்சு வாரியர், சார்பேட்டா பரம்பரை பட நடிகை துஷாரா விஜயன் மற்றும் நடிகை ரித்திகா சிங் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நடிகர் ரஜினிகாந்தும், ஃபகத் பாசிலும் ஒரே ஃப்ரேமில் உள்ளனர். இரு மாஸான ஹீரோக்கள் ஒரே ஃப்ரேமில் இருப்பதால் இந்த சீன் மிகப்பெரிய கைத்தட்டுக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT