Vijayaaknth And Rajinikanth 
வெள்ளித்திரை

"விஜயகாந்த ரொம்ப மிஸ் பண்றேன்" ரஜினிகாந்த் உருக்கம்!

விஜி

மறைந்த நடிகர் விஜயகாந்தின் பிரிவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

தேமுதிக நிறுவனரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் இந்த உலகை விட்டு பிரிந்தார். அவரின் உடல் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் மறைவால் ஒட்டு மொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கியது என்றே சொல்லலாம். இவரின் பூத உடலை காண லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் குவிந்தனர். பெருந்திரளான மக்கள் பேரணிக்கு நடுவில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. மக்களின் கண்ணீர் கடலுக்கு நடுவே விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கேப்டனின் மறைவுக்கு பின்னர் அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறை சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அந்த விருது விழா அண்மையில் டெல்லியில் நடைபெற்றபோது கேப்டன் விஜயகாந்த் சார்பில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கையால் அவ்விருதை பெற்றுக்கொண்டார். இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது குறித்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர், என்னுடைய அருமை நண்பர் அமரர் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது கொடுத்து கவுரவித்துள்ளார்கள். ரொம்ப மகிழ்ச்சி. அதுமட்டுமின்றி, இந்திய நாட்டின் பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் விஜயகாந்தின் வரலாற்றையும் பதிவிட்டுள்ளார்கள். அது அவருடைய பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கிறது.

விஜயகாந்த், நம்முடன் இல்லை என்பதை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. டக்குனு தோன்றி பல சாதனைகளை செய்து அப்படியே மறைந்துவிட்டார். இனிமே விஜயகாந்த் மாதிரி ஒருத்தரை பாக்கவே முடியாது. அவரை நான் ரொம்ப மிஸ் பண்றேன். மதுரையில் பிறந்த ஒரு மதுரைவீரன் கேப்டன் விஜயகாந்த். அவர் நாமம் வாழ்க, நன்றி என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பலரும் விஜயகாந்தை மிஸ் செய்து தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT