ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங் 
வெள்ளித்திரை

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு விரைவில் டும் டும்.. இணையத்தில் வைரலாகும் திருமண பத்திரிகை!

விஜி

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் திருமண பத்திரிகை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு கில்லி என்ற கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங். அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார். தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உட்பட சில படங்களில் நடித்திருப்பவர், ரகுல் ப்ரீத் சிங். கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ள அவர், சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும் நடித்துள்ளார்.

இதற்கிடையே ரகுல் ப்ரீத் சிங் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை காதலித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

ரகுல் ப்ரீத் சிங்

ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானியை ஜோடி வரும் பிப்ரவி மாதம் 21ஆம் தேதி திருமணம் செய்துக்கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் கோவாவில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இவர்களது திருமண பத்திரிகை இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

கவிதை - மாற்றம் வேண்டும்!

60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

SCROLL FOR NEXT