Jaragandi - Game Changer 
வெள்ளித்திரை

ட்ரெண்டாகும் ராம் சரண் 'ஜரகண்டி' பாடல்... வைப் செய்யும் ரசிகர்கள்!

விஜி

கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் ஊழலுக்கு எதிரான கதைக்களத்தை கொண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து நீண்ட ஆண்டுகள் கழித்து இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் முடிவு செய்தார். அதற்காக நடிகர் கமலஹாசன் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக படம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட சுமூகமான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து படப்பிடிப்பு மீண்டும் தற்போது தொடங்கி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பாதியில் நின்ற போது இயக்குனர் ஷங்கர் நடிகர் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படத்தை இயக்கத் தொடங்கினார்‌. இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். கேம் சேஞ்சர் திரைப்படம் அரசியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி, எஸ்.ஜே சூர்யா, சுனில், ஜெயராம், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.

இன்று ராம் சரண் பிறந்தநாளையொட்டி கேம் சேஞ்சர் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. தமன் இசையில் உருவான, ஜரகண்டி பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. பாடல் காட்சியின் சில துணுக்குகளும், ஷுட்டிங் ஸ்பாட் வீடியோவும் இந்த பாடலில் இடம்பெற்றிருந்தது. வழக்கம் போல் கலர்ஃபுல்லாக பாடலை எடுத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். நடனத்தை அமைத்தவர் பிரபுதேவா. நடன அசைவுகளும் வித்தியாசமாக, மனதை கவரும் வகையில் இருந்தன. முக்கியமாக பாடலின் டியூன் கேட்டவுடன் பிடிக்கும்படி இருந்தது. மொத்தத்தில் ராம் சரண் ரசிகர்களின் காத்திருப்புக்கு சரியான ட்ரீட்டாக ஜரகண்டி பாடல் அமைந்துள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே டாப் ட்ரெண்டிங் இடத்தை பிடித்துள்ளதால் ரசிகர்கள் வைப் செய்து வருகின்றனர்.

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

SCROLL FOR NEXT