Rashmika Mandanna 
வெள்ளித்திரை

ராஷ்மிகா மந்தனாவுக்கு புதிய பதவியை கொடுத்த மத்திய அரசு!

பாரதி

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு மத்திய அரசு ஒரு பதவி அளித்திருக்கிறது. அது என்ன பதவி? எதற்கு அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம்…

விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா, அப்படத்தின் மூலமே தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். பின்னர், National Crush ஆக வலம் வரும் இவரின் படங்கள் தொடர் ஹிட்களை கொடுக்க ஆரம்பித்தன. இவரின் திறமையான நடிப்பு முதலில் டோலிவுட்டிலிருந்து கோலிவுட்டிற்கு இவரை அழைத்து வந்தது. சுல்தான், வாரிசு ஆகிய தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை பெற்ற இவர், பின்னர் புஷ்பா படத்தின் மூலம், இந்தியா முழுவதும் பிரபலமானார்.

இப்படமே அவருக்கு பாலிவுட் வாய்ப்புகள் வர காரணமானது.

அந்தவகையில், ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா அனிமல் என்ற படத்தில் நடித்தார். இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும், ராஷ்மிகா கெர்ரியரை வளர்த்துவிட்டது என்றே கூறலாம். ஏனெனில், படத்தின் கதை எப்படி இருந்தாலும், ராஷ்மிகாவிற்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்திற்கு நன்றாகவே அவர் உயிர் கொடுத்திருந்தார். இதனையடுத்து ராஷ்மிகா நடிப்பில் அடுத்து புஷ்பா 2 படம் வெளியாகவுள்ளது. அதேபோல், இவர் சல்மான் கானுடன் ஜோடி சேரவுள்ளதாகவும் செய்திகள் வந்தன.

இந்தநிலையில், கடந்த வருடம் ராஷ்மிகா குறித்த டீப் ஃபேக் வீடியோ வெளியான நிலையில் அது குறித்து அவர் துணிச்சலாக பேசினார். இதனால் தற்போது அவரை இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய தேசிய விளம்பர தூதராக நியமித்துள்ளனர். மேலும் இதுகுறித்து நடிகை ராஷ்மிகா கூறும்போது சைபர் குற்றத்தால் நான் பாதிக்கப்பட்டவள் என்பதால் அது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது சைபர் க்ரைம்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்க தக்க ஒன்றாக உள்ளது. அனைவருக்கும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்க ராஷ்மிகாவின் அர்ப்பணிப்பு உதவியாக இருக்கும் என்று உள்துறை அமைச்சகம் நம்புகிறது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT