மாதா - பிதா - குரு (அம்மா) - தெய்வம். ஒரு விஷயத்தை கற்று கொள்வதில் நமக்கு குரு முக்கியம். அந்த குருவே அம்மாவாக அமைந்துவிட்டால் மிக சிறப்பாக இருக்கும்.
இன்று திரையில் கேட்கும் பல ஹீரோயின்களின் குரலுக்கு சொந்தக் காரர் ரவீனா ரவி. இவர் முன்னணி கலைஞர்களுக்கு டப்பிங் குரல் தர ஆரம்பித்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
" இது வரை 104 டைரக்டர்களுடன் பணியாற்றி விட்டேன். பல ஹீரோயின்களுக்கு குரல் தந்து கொண்டிருக்கிறேன். இன்று எனக்கு கிடைத்திருக்கும் புகழுக்கு முக்கிய காரணம் என் அம்மா ஸ்ரீஜா ரவி அவர்கள்தான் என் அம்மா கடந்த 45 வருடங்களாக டப்பிங் துறையில் பணியாற்றி வருகிறார். ஐந்து முறை மாநில அரசின் விருது பெற்றவர்.
அம்மா தந்த வழி காட்டுதல் இந்த டப்பிங் துறையில் பிரகாசிக்க உதவுகிறது. அம்மாவே எனக்கு குருவாக அமைந்தது நான் செய்த பாக்கியம்.
என் உயிர் உலகம் எல்லாமே என் பெற்றோர்கள் ரவீந்திரநாதன்-ஸ்ரீஜா தான்" என்கிறார் ரவீனா ரவி. தாயிற் சிறந்த குரு யாருமில்லை.