Samantha Ruth Prabhu 
வெள்ளித்திரை

சமந்தாவிடம் காதலை சொன்ன இளைஞர்... வைரலாகும் போஸ்ட்!

விஜி

நடிகர் நாக சைத்தன்யாவின் 2வது திருமணம் குறித்த பேச்சுக்கள் இணையத்தில் உலாவி வரும் நிலையில், அவரின் முதல் மனைவியான நடிகை சமந்தாவிற்கு ஒரு இளைஞர் ப்ரபோஸ் செய்தது தற்போது பேசும்பொருளாகியுள்ளது.

பழம்பெரும் நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் மகன் நாகார்ஜுனா. இவர் தெலுங்கு திரையுலகில் மூத்த மற்றும் முன்னணி நடிகராக உள்ளார். நாகார்ஜுனா மகனும் நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 2017ல் திருமணம் செய்து கொண்டனர். 2021-ல் மனக்கசப்புக் காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனிடையே, நாக சைதன்யாவுக்கு மறுமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் விரும்பினர். இந்நிலையில், பல வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த சோபிதா துலிபாலாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் ரசிகர்களிடையே பெரும் சலசலப்பே ஏற்பட்டது. சமந்தாவுடன் திருமண உறவில் இருந்த போதே, நாக சைதன்யா சோபிதாவுடன் உறவில் இருந்ததாகவும் இதுதான் அவர்களின் திருமணம் பிளவுபட்டு போவதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. சமந்தாவுக்கு துரோகம் செய்துவிட்டதாக பலரும் குமுறி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக இணையத்தில் ட்ரெண்டிங் பேச்சு என்றால் சமந்தா - நாகசைதன்யா தான்.

அந்த வகையில், ஒரு ரசிகரும் இது குறித்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், சமந்தாவிற்கு என்ன நேர்ந்தாலும் தான் அவருக்கு துணையாக கூடவே இருப்பேன் என்றும், தயவு செய்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் காமெடி கான்செப்ட் ரீல்ஸ் வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார். சாதாரண வீடியோவாக இருந்த ரீல்ஸ், சமந்தாவின் கமெண்டால் தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

அந்த இளைஞர் ரீல்ஸ் வீடியோவின் பின்னணியில் ஜிம் புகைப்படங்களை இணைத்திருந்தார். அந்த போட்டாேக்கள் தன்னை கிட்டத்தட்ட சம்மதிக்க வைத்ததாக கமெண்ட் செய்திருக்கிறார். இதையடுத்து, இந்த வீடியோவோடு சேர்த்து சமந்தாவின் கமெண்டும் வைரலாகி வருகிறது. என்னதான் சிரித்து பேசி கிண்டலடித்தாலும் ரசிகர்கள் பலர் சமந்தாவிற்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT