லெஜண்ட் சரவணன்
லெஜண்ட் சரவணன் 
வெள்ளித்திரை

பிரபல இயக்குனருடன் கைக்கோர்க்கும் லெஜண்ட் சரவணன்.. அடுத்த படத்தின் சூப்பர் அப்டேட்..!

விஜி

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படங்களை இயக்கி வந்த ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜண்ட் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் லெஜண்ட் சரவணன். கூடிய சீக்கிரமே புதிய பட அறிவிப்பை வெளியிடுவேன் எனக் கூறியிருந்த நிலையில், அவரது அடுத்த படத்தை யார் இயக்கப் போறாங்க என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

வெறும் விளம்பரத்தில் நடித்து வந்த லெஜண்ட் சரவணன், தி லெஜண்ட் என்ற படத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படம் கணிசமான வெற்றியையே கொடுத்த நிலையில், அடுத்த படம் நல்ல படியாக கொடுக்க வேண்டும் என இயக்குனரை தேடி வந்தார் லெஜண்ட் சரவணன்.

தற்போது தனுஷின் கொடி, சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, சூரியின் கருடன் உள்ளிட்ட படங்களை இயக்கி வரும் துரை செந்தில் குமார் தான் லெஜண்ட் சரவணனின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆரம்பத்தில் துரை செந்தில்குமார் ரொம்பவே தயங்கினார் என்றும் அதன் பின்னர் லெஜண்ட் சரவணன் தற்போது சூரி படத்துக்கு அவர் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக கொடுப்பதாக டீல் பேசிய நிலையில், அதற்கு ஓகே சொல்லி லெஜண்ட் படத்தை இயக்கப் போகிறார் என்றும் கூறுகின்றனர். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடடே! வாட்ஸ்அப்பில் மின் கட்டணமா: இது நல்லா இருக்கே!

முட்டி கொண்ட கமலா - ஈஸ்வரி... ராதிகா வீட்டில் அடுத்து என்ன நடக்கும்? பாக்கியலட்சுமி அப்டேட்!

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா.. மாஸான அப்டேட்டால் ரசிகர்கள் குஷி!

காலையில் எழுந்ததும் வேம்பு நீர் குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்!

அவெஞ்சர்ஸ் ரேஞ்சில் உருவாகும் விஜய்யின் GOAT... மாஸ் படத்தை வெளியிட்டு அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

SCROLL FOR NEXT