Velpari-Shankar 
வெள்ளித்திரை

வேள்பாரி நாவலின் காட்சிகளை பார்த்து கடுப்பான ஷங்கர்! சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வரும் மக்கள்!

ராஜமருதவேல்

இந்தியன் 2 திரைப்படத்தின் தோல்வியை விட அந்த திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் விமர்சனம் அதிகளவில் பேசப்பட்டு இருந்தது. படத்தை பலரும் நகைச்சுவைக்கு உள்ளாக்கி இருந்தனர். இதற்குள் அடுத்த தலைவலி ஷங்கருக்கு வந்து விட்டது.

சமீபத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தனது X பக்கத்தில், கடுமையான எச்சரிக்கையுடன் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "உங்கள் அனைவரின் கவனத்திற்கு... சு.வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி நாவலின் முக்கியமான காட்சிகளை திரைப்படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் படமாக்குகின்றனர். சமீபத்தில் வெளியான ஒரு திரைப்பட டிரெய்லரில் நாவலின் முக்கியமான காட்சி பயன்படுத்தப்பட்டு இருப்பதைப் பார்த்து நாவலின் காப்புரிமையை பெற்ற எனக்கு வேதனையாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

"திரைப்படங்கள் மற்றும் வெப்ஸீரிஸ்களில் வேள்பாரி நாவலை பயன்படுத்தாதீர்கள். படைப்பாளிகளின் உரிமையை மதியுங்கள். உரிய அனுமதியின்றி வீரயுக நாயகன் வேள்பாரி நாவலிலிருந்து காட்சிகளை எடுத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் தெரிவித்து இருந்தார்.

சு.வெங்கடேசன் எழுதி இருந்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை கோவிட் காலத்தில் படித்து அதில் ஈர்க்கப்பட்டு அந்த நாவலின் கதை உரிமையை திரைப்படமாக்கும் பொருட்டு வாங்கி வைத்திருந்தார் ஷங்கர். அந்த நாவலை 3 பாகமாக மிகப் பிரம்மாண்ட முறையில் எடுக்கவும் ஷங்கர் திட்டமிட்டு இருந்தார். தற்போது இந்தியன் 3, கேம் சேஞ்சர் படங்களில் வேலைகளில் இருக்கும் ஷங்கர், அந்நியன் ஹிந்தி ஆக்கத்தை முடித்து விட்டு வீரயுக நாயகன் வேள்பாரி படத்தை துவங்க திட்டமிட்டிருந்தார். இந்த கதையில் நாயகனான பான் இந்தியா நடிகர் யாஷ் நடிக்க பேச்சு வார்த்தையும் நடந்தது. விக்ரம் அல்லது சூரியாவை நாயகனாக்கும் திட்டம் இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது .

இந்நிலையில் ஷங்கரின் டிவிட்டை பார்த்த ரசிகர்கள் ஒருபுறம் ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா படத்தை தான் குறிப்பிடுகிறார் என்றும் சிலர் சூரியாவின் கங்குவா திரைப்படத்தை குறிப்பிடுகிறார் என்றும் விவாதம் செய்கின்றனர். இன்னொரு புறம் முன்னர் பலர் எழுதி வைத்திருந்த கதையைத்தான் வேள்பாரி நாவலாக உருவாக்கியதாக சு.வெங்கடேசன் ஒரு புத்தக வெளியீட்டு விழாவின்போது கூறியதாக, தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

ஷங்கரின் பல படங்களில் ஹாலிவுட் படத்தின் காட்சிகளை அப்படியே எடுத்து வைத்திருப்பார். எந்திரன் படத்தின் கதையும் பல காட்சிகளும் "வில்ஸ்மித் நடித்த  ரோபாட் படத்தை ஒத்து இருக்கும் என்றும் அந்நியன் படத்தின் சண்டைக் காட்சிகளும் ஹாலிவுட் படத்தின் முன்பே வந்தது என்றும் ,மேலும் ஷங்கரின் 'ஐ' திரைப்படம் கூட பியூட்டி அன் தி பீஸ்ட் படத்தின் கதையை உல்டா அடித்திருப்பதாக" ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளின் முழு விவரம்!

வேளாண் சுற்றுலாவின் அவசியம் அறிவோமா!

நம்மோடு சிறுகச் சிறுக இணைந்து விட்ட சின்னத்திரை! ஆனால்..!

The Amazing World of the Leafcutter Ants: A Kid’s Adventure!

விமர்சனம்: ‘மெய்யழகன்’ - இவனை ரசிக்க பொறுமை  வேண்டும்!

SCROLL FOR NEXT