SK 21 Amaran  
வெள்ளித்திரை

தீபாவளி ரேசில் அமரன்... ரிலீஸ் தேதி இதுதான்!

விஜி

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள, 'அமரன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக பொங்கலுக்கு அயலான் திரைப்படம் வெளியானது. சயின்ஸ் பிக்‌ஷனாக உருவாக்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் SK 21 படம் வெளிவர உள்ளது. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK 21 படத்தில் நடித்து வருகிறார். ராணுவ வீரராக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. அமரன் படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார். இப்படம் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்து கட்டுமாஸ்தான் உடற்கட்டுக்கு மாறி நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை காஷ்மீரில் தான் நடத்தினர்.

அமரன் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து அதன் பின்னணி பணிகள் ஜோராக நடைபெற்று வருகின்றன. இதனிடையே அப்படத்தின் ரிலீஸ் குறித்து அவ்வப்போது தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், 'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

அஜித் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் தற்போது போட்டியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடா முயற்சி படமும் தீபாவளியையொட்டி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதில் யார் பின்வாங்குவார்கள் என்பது குறித்து தெரியவில்லை.

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

SCROLL FOR NEXT