Sivakarthikeyan 
வெள்ளித்திரை

பிரம்மாண்ட கேக்... தடபுடல் விருந்து... மாஸாக பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

விஜி

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 39-ஆவது பிறந்தநாளை, SK23 படக்குழுவினருடன் கேக் வெட்டி, பிரியாணி விருந்தோடு கொண்டாடியுள்ளார்.

சினிமா பயணத்தில் பல நடிகர்கள் விலகி வரும் நிலையில், அந்த இடங்களை நிரப்பும் நடிகராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து வருகிறார். அடுத்தடுத்து பிஸியாக நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். ரசிகர்களுக்கு டிரீட்டாக அமரன் பட அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் டீஸர் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

அமரன் படத்தின் படப்பிடிப்பை முடிந்த கையேடு, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், தற்போது சிவகார்த்திகேயன் தன்னுடைய SK23வது படத்தை நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கிய நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரித்து வருகிறது.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில், சிவகார்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார். தொடர்ந்து படக்குழுவினர் அனைவருக்கும் தன்னுடைய கைகளாலேயே பிரியாணி விருந்து அளித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT