வெள்ளித்திரை

சொகுசுக் கப்பலில் புத்தாண்டு கொண்டாடிய நடிகை பிரியங்கா சோப்ரா: வைரல் போட்டோ!

கல்கி

பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தன் கணவர் நிக் ஜோனஸூடன் கருத்து வேற்றுமை காரணமாக விவாகரத்து செய்ததாக பரபரப்பாக பேசப்பட்டது.

.இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சொகுசுக் கப்பலில் தன் கணவருடன் புத்தாண்டு கொண்டாடிய படங்களை வெளியிட்டது, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

.தமிழில் நடிகர் விஜய்யின் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பின்னர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் வெற்றிகரமான நடிகையானார். இவர் கடந்த 2018-ல் தன்னைவிட 10 வயது குறைவான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை மணந்து அமெரிக்காவில் குடியேறினார். இந்நிலையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்யவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரியங்கா தனது கணவர் நிக் ஜோன்ஸ் பெயரை தன் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கியது இதற்கு காரணமாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது புத்தாண்டையொட்டி கப்பலில் இருவரும் பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவை வைரலாகியுள்ளது.

தீப திரிகளின் வகைகளும்; பயன்களும்!

அருகி வரும் அரியக் கலை தெருக்கூத்து!

லென்டில்ஸ் அன்ட் லெக்யூம்ஸ் தரும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

இயற்கையை ரசிக்க என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

இணையத்தில் உள்ள AI Web Browsers என்னென்ன தெரியுமா? அவற்றின் பலன்களைப் பார்ப்போமா?

SCROLL FOR NEXT