Tumbbad  
வெள்ளித்திரை

போய் தூங்குங்க, இல்ல ஹஸ்தர் வந்துருவான்! 

கிரி கணபதி

இந்திய சினிமா உலகில் பலவிதமான திரைப்படங்கள் வெளிவந்தாலும் Tumbbad என்ற திரைப்படம் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்தத் திரைப்படத்தின் கதைக்களம், காட்சிகள், இசை எல்லா அம்சங்களிலும் திரைப்பட ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தத் திரைப்படம் வெளிவந்த பிறகு பல விதமான விமர்சனங்களும், விவாதங்களும் எழுந்தன. இந்தப் பதிவில் Tumbbad திரைப்படத்தின் சிறப்புகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம். 

Tumbbad திரைப்படம் ஒரு கற்பனைக் கதை. இந்த கதை ஒரு குடும்பத்தின் பல தலைமுறைகளாக நீடிக்கும் பேராசை மற்றும் அதன் விளைவுகளை மையமாகக் கொண்டது. தங்கத்தை தேடி ஒரு குடும்பம் செய்யும் தியாகங்கள், மோசமான செயல்கள் என பல விஷயங்கள் இந்தக் கதையில் இடம் பெறுகின்றன. இந்தக் கதைக்களம் ரசிகர்களைக் கவர்ந்ததோடு மட்டுமின்றி, இந்திய சினிமா உலகில் திகில் திரைப்படங்களுக்கான மற்றொரு பரிணாமத்தைத் திறந்தது. 

இந்த திரைப்படத்தின் காட்சிகள் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும். குறிப்பாக பழங்கால கிராமபுற வாழ்க்கை, இயற்கை காட்சிகள் என பலவற்றையும் அழகாக படமாக்கி இருப்பார்கள். இதன் இசை கதைகளத்திற்கு ஏற்றவாறு சரியான முறையில் இருந்தது. பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் பலம் சேர்த்தது. 

Tumbbad திரைப்படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருந்தனர். டெக்னிகலி மிகச் சிறப்பாக தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக, ஹஸ்தர் என்ற பேயின் கிராபிக்ஸ் காட்சிகள் உண்மையிலேயே உங்களை பயமுறுத்தும். 

இதன் காரணமாகவே Tumbbad திரைப்படம் விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது. இதனால், இத்திரைப்படம் பல விருதுகளை அள்ளிக் குவித்தது. இந்தத் திரைப்படம் வெளிவந்த பிறகு இந்திய சினிமாவில் கற்பனை கதைகளுக்கான வரவேற்பு அதிகரித்தது.  இந்திய சினிமாவில் Tumbbad ஒரு முக்கியமான படைப்பு என்றால் மிகை ஆகாது. 

முடிந்தவரை அந்தத் திரைப்படத்தில் வரும் காட்சிகளை விவரிக்காமல், இந்தப் பதிவில் அதன் சிறப்புகளை குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைத்தால் நிச்சயம் ஒருமுறை பார்த்துவிடுங்கள். நீங்கள் அதிகமாக பயப்படுவீர்கள் என்றால் இரவு நேரத்தில் இந்தத் திரைப்படத்தை பார்க்க வேண்டாம். 

சரி, நேரம் ஆச்சு… போய் தூங்குங்க, இல்ல ஹஸ்தர் வந்துருவான். 

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT