வெள்ளித்திரை

கின்னஸ் சாதனை படைத்த நடிகர் ஆர்.கே!

கல்கி

-லதானந்த்.

மிழ் திரையுலகைப் பொறுத்தவரை புதுமுக நடிகராக அறிமுகமாகும் போது ஒரு சிலர்தான் முதல் படத்திலேயே தனித்தன்மையுடன் தங்களது முத்திரையை பதித்து ரசிகர்கள் மனதில் பதித்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகர் ஆர்கே. 

'எல்லாம் அவன் செயல்' என்ற தனது முதல் படத்திலேயே அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக மட்டுமல்ல…  அழகான உச்சரிப்புடன் தமிழ் பேசும் ஹீரோவாகவும் அறிமுகமானார் ஆர்கே. தொடர்ந்து, 'என் வழி தனி வழி', 'வைகை எக்ஸ்பிரஸ்' என அடுத்தடுத்த படங்களிலும் தனது திறமையை நிரூபித்து, தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார் நடிகர் ஆர்கே.

ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் உண்டு. வழக்கமான ஒரு பிசினஸ்மேன் ஆக இல்லாமல்,  ஏதோ ஒரு வகையில் மக்களின் அடிப்படைப் பிரச்சனையைத் தீர்க்கப் புதுவிதமான கண்டுபிடிப்புகளைப் பல்வேறு ஆய்வுகளுக்கு இடையே கண்டுபிடித்து, தரக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தி, பின்னர் சந்தைப்படுத்தி வெற்றிகரமான ஒரு கண்டுபிடிப்பாளராகவும் வலம் வருகிறார் ஆர்கே.

ஆனால் இவருடைய கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் அதற்காக இவருக்கு கிடைத்த அங்கீகாரமும் பெரும்பாலும் வெளியே தெரியவே இல்லை. அவரும் அதைப் பறைசாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

ஆனால் கைகளில் ஒட்டாமல் நரைமுடிக்கு டை அடிக்கும் பிரச்சனைக்குப் புதிய தீர்வாக இவர் கண்டுபிடித்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பு, இவருக்கு உலகெங்கிலும் பல்வேறு விதமான அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்துள்ளது. குறிப்பாக, இவரது இந்தக் கண்டுபிடிப்பைப் பாராட்டி, அதை அங்கீகரிக்கும் விதமாக மலேசியா, நைஜீரியா, பிரேசில் உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மூலமாக 18 முனைவர் பட்டங்கள் நடிகர் ஆர்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல… மலேசியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான 'டத்தோ ஸ்ரீ' பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற இந்தத் தயாரிப்பைக் கடந்த ஐந்து வருடங்களாக வெற்றிகரமாக மார்க்கெட்டில் உலா வரச்செய்து இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். உலக நாடுகள் இவரது கண்டுபிடிப்பை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் எனத் தீர்மானித்து அதற்கான வேலைகளில் இறங்கிய சமயத்தில், கடந்த 2019-ம் வருடம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, ஒரே இடத்தில் 1005 பேரை இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்புவைப் பயன்படுத்தச் செய்து, மிகப் பெரிய கின்னஸ் சாதனை நிகழ்த்தி இதன் தரத்தை நிரூபித்தார் ஆர்கே.

தற்போது அதற்கான அங்கிகாரம்தான் இவருக்குத் தொடர்ந்து கிடைத்துவருகிறது. குறிப்பாக, இதற்காக இந்திய அரசிடமிருந்து இருபது வருடங்களுக்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார் ஆர்கே.

இந்தநிலையில் சினிமாவை விட்டு ஆர்கே சற்றே ஒதுங்கிவிட்டாரோ என்கிற சந்தேகம் ஏற்படவே செய்யும். ஆர்கே அந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

"எப்போதும் சினிமாவில் என்னுடைய கவனம் இருந்துகொண்டேதான் இருக்கும். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா தாக்கம் காரணமாக சினிமாவில் எந்த ஒரு அடியையும் முன்னெடுத்து வைக்க முடியாத சூழல் இருந்தது. இப்போது நிலைமை சரியாகி விட்டதால் என்னுடைய அடுத்த படத்திற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும்.

ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்காக நான் படம் எடுக்கப்போவதில்லை. என்னுடைய படங்கள் எப்பொழுதும் தியேட்டர்களில்தான் வெளியாகும். திரையரங்குகளில் படம் பார்ப்பதற்காக படம் எடுப்பவன் நான். ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப் 2 படங்களின் பிரம்மாண்டத்துக்குச் சற்றும் குறைவில்லாத வகையில்தான் என்னுடைய படங்களும் உருவாகின்றன. அதில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டேன்" என்று சொல்கிறார் ஆர்.கே.

தலைமுடிக்கு டை அடிக்கும் பிரச்சனைக்கு மட்டுமல்ல… இன்றைக்கு உலகத்தில் இன்னொரு தலையாய பிரச்சனையாக இருக்கும் குறட்டைப் பிரச்சினைக்கும் இவர் மருந்து கண்டுபிடித்துள்ளார். இதற்காக, தான் கண்டுபிடித்துள்ள தயாரிப்பைக் கடந்த மூன்று வருடங்களாக மக்களிடத்தில் பயன்பாட்டிற்காக அளித்துள்ளார் ஆர்கே. எப்படித் தனது விஐபி ஹேர் கலர் ஷாம்பூவுக்கு இந்திய அரசின் காப்புரிமை கிடைத்ததோ, அதேபோலக் குறட்டைப் பிரச்சனைக்குத் தீர்வாக, தான் கண்டுபிடித்த இந்த தயாரிப்புக்கும் காப்புரிமை கிடைக்கும் என உறுதியாக நம்புகிறார் ஆர் கே.

தன்னுடைய இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை பிரபலப்படுத்த, இந்தியாவில் உள்ள ரயில் இன்ஜின்களில் வண்ண விளம்பரங்கள் செய்துள்ளார். மொத்தம் 50 ரயில் இன்ஜின்களில் தனது விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை விளம்பரப்படுத்த பட இருப்பதாக கூறியுள்ளார். 

கல்வி, மருத்துவம் உள்ளிட்ட ஏழை மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளுக்குத் தனது அறக்கட்டளை மூலம் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார். ஒரு பக்கம் வியாபாரம், இன்னொரு பக்கம் சினிமா என்று இருந்தாலும், தனது வருமானத்தில் 25% ஏழை மக்களின் உதவிக்காகத் தனியாக ஒதுக்கி வைத்துவிடுவதாகச் சொல்கிறார் நடிகர் ஆர்கே.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT