Meiyazhagan 
வெள்ளித்திரை

பிரேம்குமாரின் 'மெய்யழகன்' படத்துக்குப் பின்னால் இப்படி ஒரு கதையா?

ரேவதி மகேஷ்

2018 ஆம் ஆண்டில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் 96! இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் பிரேம்குமார் அவர்கள். விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்திருந்தனர். அந்தத் திரைப்படம் 50 கோடி வசூலித்ததாக செய்திகள் வந்தன.

இயக்குனர் பிரேம்குமார் தற்பொழுது கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்த மெய்யழகன் திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படம் மிகவும் நன்றாக வந்திருப்பதாகத் தெரிகிறது.

பிரேம் குமார் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பட்ட கஷ்டத்தை மனம் திறந்து கூறியுள்ளார். அவர் 96 படம் மூலமாக வந்த பணத்தை முழுவதுமாக செலவு செய்து விட்டாராம். சில வருடங்களாக படம் எதுவும் இயக்கவில்லை.

அவ்வாறு இருக்கையில் சில மாதங்கள் முன்பு லயோலா கல்லூரியில் செமினார் வகுப்பு நடத்தியிருக்கிறார். செமினார் முடிந்து காரில் ஏறுகையில் ஒரு மாணவன் நினைவுப்பரிசை அவரிடம் கொடுக்க அவர் அதை காரின் பின் சீட்டில் வைத்து விட்டாராம்.

ஆனால் காரில் டீசல் மிகவும் குறைவாக இருந்ததாகவும் அந்த கல்லூரிக்கு வெளியில் வரை கார் சென்று விட்டால் போதுமென்றும் நினைத்தாராம். டீசல் போடக்கூட அவரிடம் பணம் இல்லையாம்.

எதேச்சையாகப் பார்க்கையில் காரில் அந்த நினைவுப் பரிசுடன் இருந்த கவரில் அவருக்கான போக்குவரத்து செலவுக்கான பணம் வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப்பணமே காருக்கு டீசல் போட உதவியிருக்கிறது.

இது நடந்த அடுத்த நாளே நடிகர் கார்த்தி அவர்கள் கால் செய்து 'உங்களிடம் எனக்காக ஏதோ கதையிருக்கிறதாமே; அதைச்சொல்லாமல் தயங்குவதாய் கேள்விப்பட்டேன். வந்து கதை சொல்லுங்கள்' என்றாராம்.

அதுவே மெய்யழகன் படத்துக்கான ஆரம்பம். இப்போது படம் சிறப்பாக முடிந்து விட்டது. சூர்யா ஜோதிகாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே இந்தப்படத்தைத் தயாரித்துள்ளது. ஸ்ரீதிவ்யா மற்றும் ராஜ்கிரண் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற செப்டம்பர் 27 ம் தேதி படம் வெளியாகிறது.

இந்தப்படமும் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT