Sardar 2 
வெள்ளித்திரை

சர்தார் 2 ஷூட்டிங்கில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு! எப்படி?

விஜி

சர்தார் 2 படபிடிப்பின் போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்த ஸ்டண்ட் கலைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான சர்தார் திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு தீபாவளிக்கு தியேட்டர்களில் வெளியானது. இந்தப் படத்தில் கார்த்தி, அப்பா - மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் ரூ.100 கோடி வசூலித்து வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நேற்று (ஜூலை 16) நடைபெற்ற படப்பிடிப்பில் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக 20 அடி உயரத்தில் இருந்து சண்டைப் பயிற்சியாளரான ஏழுமலை என்பவர் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த அடிபட்டுள்ளது.

உடனடியாக படக்குழுவினர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏழுமலையை அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்து தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் ஏழுமலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவித்தனர். இன்று அதிகாலை 12 மணியளவில் உயிர் பிரிந்ததாக அறிவித்துள்ளனர். எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஏழுமலை சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்துவிட்டதாகவும், மருத்துவமனை உடனடியாக அழைத்து சென்று அவர் உயிரிழந்துவிட்டதாக பதிவிட்டுள்ளனர். மேலும், படக்குழு சார்பாக அவரின் மறைவுக்கும், குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவிப்பதாகும், அவரின் இறுதி சடங்கில் கடைசி வரை கூட இருப்பதாகவும் பதிவிட்டுள்ளனர். ஏற்கனவே 2022ஆம் ஆண்டு இந்தியன் 2 படம் ஷூட்டிங்கின் போது, ராட்சத கிரேன் அறுந்து விழுந்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தற்போது ஷூட்டிங்கில் மேலும் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது.

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்: Hot Flashes என்றால் என்ன? கையாள்வது எப்படி?

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

SCROLL FOR NEXT