சத்யஜித் ரித்விக் மிருணாள் சர்வதேச திரைப்பட  விருதுடன் இயக்குநர் ஜியா
சத்யஜித் ரித்விக் மிருணாள் சர்வதேச திரைப்பட விருதுடன் இயக்குநர் ஜியா 
வெள்ளித்திரை

'கள்வா'வுக்கு விருது !

ராகவ்குமார்

மேற்கு வங்க மாநிலம் தந்த இந்திய சினிமாவின் மாபெரும் இயக்குனர்கள் சத்யஜித் ரே, ரித்விக் காட்டக், மிருணாள் சென். இந்த மூன்று பெங்காலி இயக்குனர்களின் பெயரில் ஆண்டு தோறும் சத்யஜித் ரித்விக் மிருணாள் சர்வதேச திரைப்பட விழா கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா நிறைவு நிகழ்ச்சியில் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில்  தமிழ் நாட்டை சேர்ந்த ஜியா எழுதி, இயக்கியுள்ள கள்வா குறும்படத்துக்கு சிறந்த ரொமான்டிக் திரில்லர் படத்துக்கான விருது வழங்கப்பட்டது. 

கொல்கத்தா நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்  நடைபெற்றது. இந்த திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் 643 படங்கள் போட்டியிட்டன. இதில் விருதுக்காக 85 படங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் இந்தி, பெங்காலி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, மராத்தி, உருது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்கள் அடங்கும். இதில் ஒரு படமாக ஜியா இயக்கிய  ‘கள்வா’ தேர்வானது குறிப்பிடத்தக்கது.

கிங் பிக்சர்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள ‘கள்வா’ படம், இதுவரை 35 ஆயிரம் பார்வையாளர்களை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது. திரையுலகை சேர்ந்த பலர், இந்த குறும்படத்தை பார்த்து பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.மாற்று சினிமாவிற்க்கும், சிறந்த படங்களுக்கு களமாக திகழும் வாங்காள மண்ணில் தமிழ் குறும் படத்திற்க் கு அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியான பெருமை கொள்ளும் விஷயமே.

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT