Rajinikanth 
வெள்ளித்திரை

ரஜினியை செருப்பால் அடிப்பேன் என்று கூறிய இயக்குநர்… அப்படி என்ன நடந்தது?

பாரதி

தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த், ஒருகாலத்தில் ஒரு இயக்குநரிடம் செருப்பால அடிப்பேன் என்று திட்டு வாங்கியிருக்கிறார் என்று கூறினால் நம்பமுடிகிறதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஒரு அடையாளமாக இருந்து வருபவர். இவருடைய பலங்காலத்து படங்களை ரசிக்காதவர்களே கிடையாது. இந்தக் காலத்து இளைஞர்கள் கூட அவ்வளவு விரும்புவார்கள். இவரின் சென்டிமென்டல் படங்களுக்கு அந்தக் காலத்தில் அவ்வளவு வரவேற்பு கிடைத்தது. அதனாலேயே சூப்பர் ஸ்டார் என்றப் பட்டத்தைப் பெற்றார்.

தனது தனித்துவமான ஸ்டைலினால், மக்களின் மனதில் நிலைத்து நிற்பவர். இவருடைய ஸ்டைலை ரசிப்பவர்களும், பார்த்துக் கற்றுக்கொள்பவர்களும் ஏராளம். ஆனால், இவரும் ஒருகாலத்தில் ஒரு இயக்குநரிடம் திட்டுவாங்கிதான், சினிமா பயணத்தில் பயணித்திருக்கிறார்.

இதுகுறித்து அவரே ஒரு பேட்டியில் பேசியும் இருக்கிறார். அதாவது, “அன்று 8 மணிக்கெல்லாம் படப்பிடிப்பு முடிந்தது. நான் உடனே தண்ணீ அடிச்சுட்டேன். திடீரென்று ஒரு ஷாட் மிஸ் ஆகிருச்சு. வந்து நடிச்சுக்கொடுங்கன்னு சொன்னாங்க. நான் உடனே பதறிவிட்டேன். ஏனா அப்போ நான் தண்ணீ போட்ருந்தேன். என்ன பண்றதுன்னே தெரியாம குளிச்சுட்டு, ப்ரஷ் பண்ணிட்டு, மவுத் ஸ்ப்ரே யூஸ் பண்ணிட்டு போனேன்.

பாலச்சந்தர் சார்கிட்ட மாட்டிக்க கூடாதுன்னு நினைத்தேன். ஆனா, அவர் கண்டுபிடிச்சுட்டாரு. அவர் கொஞ்ச நேரம் எதுவுமே பேசவில்லை. திடீரென்று என்கிட்ட வந்து உனக்கு நாகேஷ் தெரியுமான்னு கேட்டார். நா தெரியும்னு சொன்னே. அதுக்கு அவரு, நாகேஷ் முன்னாடி நீ ஒரு தூசி கூட கிடையாது.

ஆனால், அவன் தண்ணீ போட்டு வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டான். இனி நீ தண்ணீ போட்றத பாத்தேன், செருப்பால அடிப்பேன் என்று மிரட்டினார். அன்றுதான் கடைசியாக குடிச்சேன். அப்றம் எவ்ளோ குளிர்னாலும் கூட குடிச்சது கிடையாது.” என்று பேசினார்.

இதன்மூலம் அவர் எப்படி குடியை விட்டார் என்றும், சினிமாவில் வெற்றிபெற்றதற்கான முக்கிய காரணத்தையும் கூறினார்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT