வெள்ளித்திரை

'டாடா' படத்தை மகளுடன் பார்க்க வந்த பிரபல நடிகரின் மனைவி!

கல்கி டெஸ்க்

கவின் நடித்த டாடா படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்றுள்ளது. விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் ஹீரோவாக நடிக்க, இவருக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்க, இத்திரைப்படம் தமிழகமெங்கும் 400 திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது . இந்தப் படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தில் கவின் ஒரு குழந்தைக்கு தந்தையாக நடித்துள்ளார்

இந்தப் படம் ரசிகர்களிடையே மிக சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவரும் இயல்பான நடிப்பை படத்தில் வழங்கியுள்ளதாகவும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஃபீல் குட் குடும்ப படத்தை பார்த்துள்ளதாகவும் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். குடும்பத்தினருடன் பார்க்க வேண்டிய படம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படத்தில் பாடல்களும் பின்னணி இசையும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். டாடா படம் ரசிகர்களை சிரிக்கவும் வைக்கும், அழவும் வைக்கும் என்றும் கமெண்ட்ஸ் கிடைத்துள்ளது. இப்பட இயக்குநர் கணேஷ் கே பாபுவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இத்திரைப்படத்தின் இறுதியில் நிகழும் ஓர் உணர்ச்சிகரமான தருணத்தை நவுயுக இளைஞர்களுக்கான திரைமொழியில், கலகலப்பும் எமோஷனும் கலந்து கட்டி சுவாரஸ்யமான படமாகக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு. காட்சிகள் அனைத்தையும் பார்வையாளர்களோடு ஒன்ற வைக்கும் விதத்தில் சுவாரஸ்யமாக எழுதி, படமாக்கியிருக்கிறார் என்கிற பாரட்டுதல்களையும் பெற்றுள்ளார் இயக்குநர்.

இத்தகைய சிறப்பான கமெண்ட்ஸ்களை பெற்றுள்ள 'டாடா' படத்தை முன்னாள் நடிகையும் பிரபல நடிகர் அஜித்தின் மனைவியுமான ஷாலினி அஜித், தன்னுடைய மகள் அனொஷ்கா அஜித் மற்றும் தங்கை ஷாம்லியுடன் பிரபல திரையரங்கில் பார்க்க வந்திருந்தார்.

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

Dear Girls… உங்கள் தொப்பையை மறைக்க இப்படி ட்ரெஸ் பண்ணுங்களேன்!

'இளமையில் கல்' என்பதன் அர்த்தமும் அதன் புரிதலும்... இது ரொம்ப தப்பாச்சே!

SCROLL FOR NEXT