வெள்ளித்திரை

ரஹ்மான் பாவனா இணையும் முதல் படம்!

கல்கி டெஸ்க்

புது முக இயக்குநர் ரியாஸ் மாரத் இயக்கும் ஆக்ஷன் த்ரில்லரான இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் கதாநாயகனாக நடிகர் ரஹ்மான் நடிக்கிறார். நீண்ட இடை வெளிக்கு பிறகு நடிக்க வந்த நடிகை பாவனா இதில் தடயவியல் மருத்துவ அதிகாரியாக நடிக்கிறார்.

ரஹ்மான், பாவனா முதன் முதலாக இணைந்து இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் தஹ்ரபோது ஆரம்பமானது. இதற்கு இன்னமும் தலைப்பு எது வைக்கப்படவில்லை. வித்தியாசமான படங்களை தெரிவு செய்து நடித்து வரும் நடிகர் ரகுமானின் இப்படத்திற்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. துருவங்கள் 16 படத்திற்கு பிறகு இதிலும் போலீஸ் அதிகாரியாக ரஹ்மான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை ஏ பி கே சினிமாஸ் (APK) சார்பாக ஆதித் பிரசன்ன குமார் பெரிய பொருட் செலவில் தயாரிக்கிறார். இரண்டாம் கட்ட பட பிடிப்பு பொள்ளாச்சி, பாண்டிச்சேரி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் ஜூன் மாதத்தில் நடை பெறுகிறது. துருவங்கள் 16” ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஹிந்தியில் ரஹ்மான் அறிமுகமாகும் பிரம்மாண்ட படம் ' கண்பத் ' .' குயின் ' புகழ் விகாஸ் பால் இயக்கும் இப்படத்தில் ரஹ்மானும்,டைகர் ஷார்ஃபும் அமிதாப் பச்சனின் பிள்ளைகளாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.

இப்படத்தை தவிர,மலையாளத்தில் ரஹ்மான் கதா நாயகனாக நடிக்க, அமல் K ஜோப் இயக்கும் 'ஏதிரே ' ,சார்ல்ஸ் இயக்கும் 'சமாரா' மற்றும் தமிழில் டைரக்டர் சுப்பு ராம் இயக்கும் 'அஞ்சாமை ' , கார்த்திக் நரேன் இயக்கத்தில் சரத்குமார், அதர்வாவுடன் இணைந்து நடிக்கும் ' நிறங்கள் மூன்று ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

"திரையில் வீரத்தை காட்டுபவர் சூப்பர் மேன் அல்ல" வெப்பன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சத்யராஜ் பேச்சு!

அடடே! வாட்ஸ்அப்பில் மின் கட்டணமா: இது நல்லா இருக்கே!

முட்டி கொண்ட கமலா - ஈஸ்வரி... ராதிகா வீட்டில் அடுத்து என்ன நடக்கும்? பாக்கியலட்சுமி அப்டேட்!

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா.. மாஸான அப்டேட்டால் ரசிகர்கள் குஷி!

காலையில் எழுந்ததும் வேம்பு நீர் குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்!

SCROLL FOR NEXT