வெள்ளித்திரை

தில் ராஜுவை கிழித்து தொங்கவிட்ட தயாரிப்பாளர்

கல்கி டெஸ்க்

பொங்கல் திருநாளையொட்டி வெளியான விஜய்யின் வாரிசு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் சக்கபோடு போட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் 300 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது. இப்படத்தின் பட்ஜெட் 200 கோடிக்கும் மேல் என்று தகவல் சொல்கிறது.

இப்படி பல கோடிகளை கொட்டி படம் எடுக்கிறார்கள். ஒவ்வொரு காட்சிக்கும் இத்தனை கோடி என்று கணக்குப்போட்டு பட்ஜெட் ஒதுக்குகிறார்கள். வாரிசு படத்தில் ஒரு சீனுக்காக 20 கோடி செலவு செய்து எடுத்திருக்கிறார்கள். அதன் பின்னர் தேவையில்லை என்று படத்திலிருந்து அக்காட்சியை நீக்கி இருக்கிறார்கள். இந்த காட்சியின் மதிப்பு 20 கோடி. இந்த மாதிரி முட்டாள்தனமாக தயாரிப்பாளர்தான் தில் ராஜு என்று சில சினிமா தயாரிப்பு நிர்வாகிகள் விமர்சித்து வருகிறார்கள்.

அதாவது, வாரிசு படத்தின் முதல் பாதியில் குஷ்பூவின் காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. ஆனால் படத்தை ஒரு குறிப்பிட்ட நீளத்துக்குள் வைப்பதற்கு மிகுந்த சவாலாக இருந்த காரணத்தினால், குஷ்புவின் காட்சிகள் நீக்கிவிட்டனர். குஷ்பூ நடித்த காட்சியை படமாக்குவதற்கு மட்டும் 20 கோடி செலவு செய்திருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அசால்டாக அந்த காட்சியை நீக்குவது தில் ராஜுவால் மட்டும் தான் முடியும்.

அதுமட்டுமின்றி வாரிசு படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு காட்சியில், குடும்பத்தினர் ஒவ்வொருவராக வந்து தனித்தனியாக அமர்ந்து சாப்பிட்டு விட்டு செல்வார்கள். ஒருவர் மற்றவர்களுடன் பேசிக்க மாட்டார்கள். இதை விஜய் அமர்ந்து கவனிப்பதாக ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். இந்தக் காட்சி மே மாதத்தில் படமாக்கப்பட்டு பிறகு அடுத்தக் கட்ட படப்பிடிப்பை டிசம்பரில் வைத்துக் கொள்ளலாம் என்று 6 மாத இடைவெளி விட்டாராம் தில் ராஜு.

பல கோடி பொருட் செலவில் பிரம்மாண்டமாக போடப்பட்ட செட்டை ஆறு மாதம் அப்படியே விட்டுவிட்டு, அதன் பின் படப்பிடிப்பை மறுபடியும் துவங்கலாம் என்பதெல்லாம் நம்ம ஊரு தயாரிப்பாளர்களுக்கு தற்கொலை செய்து கொள்கிற மாதிரிதான். இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான செட்டை மறுபடியும் ரீடைல் செய்வதெல்லாம் நம்ம ஊரு தயாரிப்பாளர்களுக்கு சாத்தியமே இல்லை. தில் ராஜுவின் புரொடக்சஷன் ஸ்டைலே வேற மாதிரி என்று பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த வருத்தம் இவருக்கு மட்டுமல்ல, வாரிசு படத்தில் இடம்பெற்ற குஷ்பூ மற்றும் ஜான் விஜய்யின் காட்சிகள் நீக்கப்பட்டது ரசிகர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் முதல் பாதியில் குஷ்புவின் காட்சி மிக சிறப்பாக அமைந்திருந்ததாம். அதுமட்டுமின்றி இந்தக் காட்சிகளை படமாக்க வேண்டும் என்றால் நிறைய பணம் செலவிடுவது மட்டுமல்லாமல் பலரும் தங்களது உழைப்பை கொடுத்திருக்கின்றனர். குறிப்பாக ஒளிப்பதிவாளர் குறைந்தது 15-லிருந்து 20 நாட்கள் அந்த பகுதியை படமாக்க உழைத்திருப்பார். ஆனால் எடிட்டிங் என்கின்ற பெயரில் அதை நீக்கியது சரியல்ல.

இந்நிலையில் வாரிசு படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை மறுபடியும் யூட்யூப்-ல் ரிலீஸ் செய்யும் திட்டத்தில் வாரிசு பட குழு இருப்பதாகவும் சமீபத்திய தகவல் தெரிவிக்கின்றன.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT