Mottai Rajendran 
வெள்ளித்திரை

இதனால்தான் என் முடி போச்சு – மொட்டை ராஜேந்திரன்!

பாரதி

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன் மொட்டை ராஜேந்திரன் தனது முடியை எப்படி இழந்தார் என்று ஒருமுறை கூறியிருந்தார். இதுகுறித்து இப்போது பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் காமெடியனாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் மொட்டை ராஜேந்திரன். ஆர்யாவின் நான் கடவுள் படத்தில் பயங்கர வில்லனாக நடித்த இவர், பின்னர் காமெடியானகவும் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிக்க வருவதற்கு முன்னர் ஸ்டன்ட் டபுளாகவே சினிமாவில் நுழைந்தார். கிட்டத்தட்ட 100 படங்களுக்கும் மேலாக ஸ்டன்ட் டபுளாக பணியாற்றியிருக்கிறார்.

பிதாமகன் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் நான் கடவுள் படத்தின்மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வில்லத்தனம் கலந்த நகைச்சுவையை வெளிப்படுத்தி ரசிர்களைப் பெற்றார். பின்னர் ஏராளமான படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துக்கொண்டார்.

ஒரு நடிகனுக்கு குறிப்பிட்ட ஒரு அடையாளம் இருந்தால், மக்கள் கவனத்தை எளிதாக பெற்று ரசிகர்களை ஈர்க்கலாம். அந்தவகையில் இவருக்கு ஒன்று அல்ல இரண்டு அடையாளங்கள் இவரின் பாத்திரத்தை தனித்துவப்படுத்தின. ஒன்று அவரின் குரல். இவரின் குரலை நிறைய பேர் மிமிக்ரி செய்து அவர்களும் பிரபலமாகினர். அந்தளவுக்கு இவரின் குரல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது.

மற்றொன்று அவரது மொட்டை. இது எந்தளவுக்கு அவரை அடையாளப் படுத்தியது என்றால், மொட்டை ராஜேந்திரன் என்றப் பெயர் மக்கள் மனதில் பதியும் அளவிற்கு அடையாளமானது. ஆனால், இவரின் இந்த மொட்டை பிறப்பிலிருந்தோ அல்லது இயற்கையாகவோ வரவில்லை. படபிடிப்பில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தாலேயே இப்படி ஏற்பட்டது.

இதுகுறித்து ஒருமுறை மொட்டை ராஜேந்திரன் பேசியாதை பார்ப்போம். “எனக்கு ஆரம்பத்தில் எல்லாம் நிறைய முடி இருந்திச்சு. ஒரு தடவை ஒரு படத்துக்காக குளத்துல குதிக்க சொன்னாங்க. நானும் பண்ணேன். அதுக்கப்றம்தான் அந்த ஊர்க்காரங்க சொன்னாங்க. அதுல ஃபேக்டரி கழிவு நீர்லாம் கலந்து இருக்குன்னு. அதோட என் எல்லாம் முடியும் போச்சு. ஆனால், அதனால்தான் எனக்கு நிறைய பட வாய்ப்பும் கிடைச்சுது.” என்று பேசினார்.

ஒரு கெட்டது மொட்டை ராஜேந்திரனுக்கு கோடி நல்லதை கொடுத்துள்ளது. நமது வேலையில் மட்டும் கவனமாக இருந்தால், இடையூறுகளெல்லாம் ஓடிப் போய்விடும் என்பதற்கு இதுவே உதாரணம்.

ஆங்கிலேயர்களை அதிரவைத்த கம்பீரமான களரிப்பயட்டின் வரலாறு தெரியுமா?

இனிய உளவாக இனிமையே பேசுக!

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

SCROLL FOR NEXT