வெள்ளித்திரை

காஜல் அகர்வாலுக்கு ஆண்குழந்தை; ரசிகர்கள் வாழ்த்து!

கல்கி

நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதையடுத்து அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். கடந்த 2008 -ம் ஆண்டு பரத்தின் பழனி படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.ராம்சரணுடன் அவர் நடித்த மகதீரா படம் வசூலில் சாதனை படைத்தது.

தமிழில் விஜயின் துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்த காஜல் அகர்வால் தமிழின் முன்னணி நடிகையானர். மேலும் அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோருக்கும் ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலு என்பவரை காஜல் அகர்வால் திருமணம் செய்தார். தன் சமூக வலைதளப் பக்கங்களில் தங்களின் ரொமாண்டிக் புகைப்படங்களை அவ்வப்போவது பதிவிட்டு வந்தார். அதில் சமீபத்தில் காஜல் அகர்வால் பதிவிட்டு வந்த புகைப்படங்கள், அவர் கர்ப்பமாக இருப்பதை தெரியப்படுத்தியது.

அதற்கு பிறகு தனது கர்ப்பகாலத்தில் எடுத்த போட்டோ ஷூட்களை சமூக வலைதளத்தில் அவ்வப்போது காஜல் பதிவிட்டுவந்தார்.இந்நிலையில் காஜல் அகர்வால் – கிச்லு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து காஜல் அகர்வாலுக்கு அவரது ரசிகர்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வரப்போகுது பாகுபலி அனிமேஷன் வெப் சீரிஸ்: எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!

ஏழுமலையான் குடியிருக்கும் ஏழு மலைகள்!

விஜய் தேவரகொண்டாவின் அடுத்தப் படத்தின் அப்டேட்!

இடி, மின்னலை முன் கூட்டியே உணர்த்தும் 'தாமினி' செயலி!

அக்னி நட்சத்திர வெயிலை சமாளிக்க வெட்டிவேரை இப்படிப் பயன்படுத்தலாமே!

SCROLL FOR NEXT