வெள்ளித்திரை

நாதிரு தின்னா.. நாதிரு தின்னா!

கல்கி

-லதானந்த்

நடன மாஸ்டர் சுவர்ணா இயக்கும் படம் 'நாதிரு தின்னா'! படத்தின் இயக்குனாராக மட்டுமல்ல.. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் நடனப்பயிற்சி என அனைத்தும் சுவர்ணா மேற்கொண்டிருகிறார். இவர் நடன அமைப்பாளராக 300க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

லட்சுமி , பானுமதி, ரேவதி, சுகாஷினி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகிய பெண் இயக்குனர்கள் வரிசையில் சுவர்ணாவும் சேர்ந்திருக்கிறார். 

படத்தின் கதை என்னவாம்? பெற்றோர் பார்த்து நடத்திவைக்கும் திருமணத்திலும், காதலுக்குப்பின் நடக்கும் திருமணத்திலும் உருவாகும் குடும்பச் சிக்கல்கள்தான் கதை. படம் முழுக்க இளமை கொஞ்சுவது காரண்டி! கூடவே தாராளமான நகைச்சுவையும் உண்டு என்கின்றனர் படக் குழுவினர்.  

ப்படத்தில் நடிக்க நடிகர், நடிகையர் தேர்வானது தமிழகம், ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா மாநிலங்களில் நடைபெற்றது. புதுமுகங்கள் சபயாச்சி மிஸ்ரா, ஷ்யாம், மகி, ராகுல் ஆகிய நால்வருடன் ராதிகா ப்ரீத்தி, விஜயலட்சுமி, ஹரிகா, ரக்‌ஷா, அப்பாஜி ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

தருண் மாஸ்டர் முக்கிய வேடமேற்றிருக்கிறார். ஸ்ரீதர் நர்லா ஒளிப்பதிவு செய்ய, வின்சென்ட் ஜெயராஜ், விஜயகுமார் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார்கள். இசை: முரளீதர் ராகி. எஸ்.எஸ்.ட்ரீம் கலர்ஸ் நிறுவனத்தார் தயாரித்திருக்கின்றனர்.

உடலை இலகுவாக வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!

காய்கறித் துண்டு, பழத் துண்டு தெரியும்; உளவியல் சொல்லும் மெல்லிய துண்டம் தெரியுமா?

பகுஜன் சமாஜ் கட்சி: மாயாவதியின் அரசியல் வாரிசு?!

Neuroplasticity-இன் அற்புதமான செயல்பாடுகள் பற்றி தெரியுமா?

நிமிடத்துக்கு நிமிடம் மாறி மாறி காட்சி தரும் தமிழகத்தின் மாயாஜால பாலைவனம்!

SCROLL FOR NEXT