மார்கோ
மார்கோ 
வெள்ளித்திரை

உன்னி முகுந்தன் நடிப்பில் உருவாகும் ‘மார்கோ’: மாஸாக வெளியானது பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

விஜி

‘கருடன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உன்னி முகுந்தன் நடிக்கும் அடுத்த படத்திற்கு, ‘மார்கோ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஹனிஃப் அடேனி இந்தப் படத்தை இயக்குகிறார்.

மலையாள திரையுலகில் தற்போதுள்ள இளம் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் உன்னி முகுந்தன். இவரது படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. உன்னி முகுந்தன் நடிக்கும் ஒவ்வொரு புதிய படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ரசிகர்களை தாண்டி அனைத்து திரையுலகினரும் காணக் காத்திருக்கும் படம் உன்னி முகுந்தன் - ஹனிஃப் அடேனி கூட்டணியில் உருவாகும் 'மார்கோ' திரைப்படம். க்யூப்ஸ் எண்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ், ஷெரீப் முஹம்மது மற்றும் உன்னி முகுந்தன் பிலிம்ஸ் இணைந்து 'மார்கோ' படத்தை தயாரிக்கின்றனர்.

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக 'மார்கோ' உருவாகி வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 'மார்கோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்தப் படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

மார்கோ படத்தின் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், மார்கோ படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. காரணம், இந்தக் கூட்டணியின் ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். ஹனிஃப் அடேனி இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் உன்னி முகுந்தன் ஹீரோவாக நடிக்க, மேலும் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

மல்லிகாபுரம், கருடன் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை தொடர்ந்து உன்னி முகுந்தன் 'மார்கோ' படத்தின் மூலம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். ஒரு சிறந்த தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் மட்டும் இல்லாமல், ஐந்துக்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்ட ஒரு ‘எட்ஜ் ஆஃப் தி சீட்’ ஆக்‌ஷன் த்ரில்லரை மார்கோ கொண்டுள்ளது. அனிமல் படத்தை போலவே வெறித்தனமான ஆக் ஷன் காட்சிகள் இந்தப் படத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீப காலங்களில் மலையாளத்தில் இதுபோன்ற ஆக் ஷன் காட்சிகள் வெளியாகவில்லை. கலகிங் சன் உள்ளிட்ட பாலிவுட் மற்றும் கோலிவுட்டின் சிறந்த அதிரடி ஆக் ஷன் இயக்குநர்களால் ஆக்‌ஷன் காட்சிகள் கையாளப்பட்டுள்ளன. மார்கோ படம் பான்-இந்திய அளவில் வெளியாக உள்ளது.

கூடுதல் சிறப்பம்சமாக இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படமான, ‘கேஜிஎஃப்’ படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் மார்கோ இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ரவி பஸ்ரூர் முதன்முறையாக இசையமைக்கும் மலையாளப் படம் மார்கோ. மேலும் மலையாளத்தில் முதல் வில்லன் ஸ்பின் ஆஃப் படம் என்ற பெருமை மார்கோவின் மற்றொரு சிறப்பு. உன்னி முகுந்தனுடன் மார்கோ படத்தில் சித்திக், ஜெகதீஷ், அன்சன் பால், கபீர் துஹான்சிங் மற்றும் அபிமன்யு திலகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் ரதி தரேஜா போன்ற முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் சில புதுமுகங்களும் நடித்துள்ளனர்.

தமிழர்களின் அடையாளமாக விளங்கிய மரம் எது தெரியுமா?

ஆன்மீகக் கவிதை - தமிழ் வளர்த்த சமயக் குரவர்!

அதிக மனக்கவலையின் பரிசு உடல் பருமன்; எப்படித் தெரியுமா?

The Color Code: A Child’s Perspective on Pink and Blue!

குடும்பத்தின் மகிழ்ச்சியில் பெண்களின் அளப்பரிய பங்கு!

SCROLL FOR NEXT