வெள்ளித்திரை

ட்ரெண்டாகும் விஜய் தேவரகொண்டா,ராஷ்மிகாவின் RWDY Hoodie!

பாரதி

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த விஜய் தேவரகொண்டாவின் ஹுடியும், விமான நிலையத்தில் இருந்து ராஷ்மிகா மந்தனா அணிந்து வந்த ஹுடியும் ஒரே மாதிரி இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் ஒரே சமயத்தில் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வந்தனர். இவர்கள் சேர்ந்து நடித்து 2018 ம் ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம்’ ரசிகர்களின் கவனத்தை அவர்கள் பக்கம் திசைத் திருப்பியது. தொடர்ந்து அடுத்த ஆண்டே இருவரும் சேர்ந்து ‘டியர் காம்ரேட் ‘ என்ற படத்தில், அந்த ஜோடிக்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் அலைமோதியது.

பிறகுதான் ராஷ்மிகா National crush என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். இப்படியிருந்தாலும், சில படங்களுக்குப் பின் ராஷ்மிகாவை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். அதேபோல் தேவரகொண்டாவுக்கும் பெரிதாக படங்கள் ஹிட் கொடுக்கவில்லை.

பின்னர் இந்த ஆண்டுத்தான் ராஷ்மிகா விஜயுடன் சேர்ந்து நடித்த ‘வாரிசு’ படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் தடம் பதித்தார். அதேபோல் இப்போது ரன்வீர் கப்பூருடன் Animal படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகயிருக்கிறார்.

தேவரகொண்டாவிற்கும் சில ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு சமந்தாவுடன் நடித்த குஷிப் படம் ஒரு கம்பேக்காக அமைந்தது. சமீபத்தில் விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பெண்ணுடன் கைக்கோர்த்தப் புகைப்படத்தை வெளியிட்டு தனது காதலியை விரைவில் அறிவிப்பதாக பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து ரசிகர்கள் ராஷ்மிக்காவாகத்தான் இருக்கும் என்று தனது கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் இன்று தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த விஜய் தேவரகொண்டா ‘Rwdy' என்ற சாக்லேட் நிறத்தில் ஹுடி அணிந்திருந்தார். அதேபோல் மும்பை விமான நிலையத்திலிருந்து ராஷ்மிகா வரும் புகைப்படம் வெளியானது.

இந்த புகைப்படத்தில் ராஷ்மிகாவும் அதே Rwdy ஹுடி அணிந்திருந்தார். இது ரசிகர்களிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது. அதோடு அந்த ரவுடி ஹுடி இப்போது அனைவராலும் ஈர்க்கப்பட்டு ஆன்லைனில் தேடப்பட்டும் வருகிறது.

சேதமடைந்த மரப்பொருட்கள்... குப்பைகளாக உங்கள் வீட்டில் உள்ளதா? அச்சச்சோ தவறாச்சே...!

குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!

சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள் ஒருகாலத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாம்!

கம்பவுன்டர்களை காணவே முடிவதில்லையே; யார் இவர்கள்? எங்கே போனார்கள்?

ஐயப்பன் தரிசனம் கார்த்திகை மாதத்தில் மட்டும்தானா?

SCROLL FOR NEXT