பிரபல நடிகர் விஜயக்குமாரின் பேத்திக்கு திருமணம் நடைபெறவுள்ளதையடுத்து குடும்பமே மணப்பெண்ணை உற்சாகமாக வரவேற்றனர்.
பிரபல நடிகர் விஜயக்குமாருக்கு முத்துகண்ணு மற்றும் நடிகை மஞ்சுளா என 2 மனைவிகள். முதல் மனைவியின் மகள்கள் தான் அனிதா, கவிதா மற்றும் மகன் அருண் விஜய். அருண் விஜய் பிறந்த சில வருடங்களில், நடிகை மஞ்சுளாவுடன் ஒன்றாக இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் முட்டிக்கொள்ளவே, முதல் மனைவி சம்மதத்துடன், மஞ்சுளாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மேலும் மஞ்சுளா மூலம் நடிகர் விஜயகுமாருக்கு, வனிதா, ப்ரீத்தா, மற்றும் ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் பிறந்தனர். இதில் வனிதா விஜயக்குமார் மட்டும் குடும்ப தகராறு காரணமாக தனியாக வாழ்ந்து வருகிறார்.
விஜயக்குமாரின் 2வது மகளான அனிதா விஜயக்குமார் ஒரு மருத்துவர் ஆவார். இவரின் மகள் தான் தியா. வெளிநாட்டில் செட்டில் ஆன இவர்கள் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார்கள். இந்த நிலையில் இவரது மகள் தியாவிற்கு இந்த வாரம் திருமணம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் அனிதா விஜயக்குமார் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எனது பேபி வந்துவிட்டாள். மணப்பெண் அவளது முக்கியமான நாளை எதிர்நோக்கி வந்துவிட்டாள் என தனது மகள் ஏர்ப்போர்டில் இருந்து வரும் வீடியோவை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார். மேலும் வீட்டிற்கு வந்த அவருக்கு குடும்பமே ஒன்றாக சேர்ந்து ஆரத்தி எடுத்து வரவேற்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவ, ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.