Vijay In GOAT 
வெள்ளித்திரை

விஜய் குரலில் வெளியான கோட் பாடல்... வைப் செய்யும் ரசிகர்கள்!

விஜி

விஜய் நடிக்கும் The GOAT படத்தின் இரண்டாவது பாடல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு 'GOAT' என தலைப்பிடப்பட்டுள்ளது. நியூ இயரை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர்கள் மூலம் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது உறுதியானது.

இந்த படத்தில், லைலா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பது தான் ஹைல்டைட். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டிற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரட்டை விஜய்யின் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்துள்ளார். GOAT திரைப்படம் கோடை விடுமுறை நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அதன் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக கசிந்த வண்ணம் உள்ளன.

விஜய் அரசியலுக்கு சென்று விட்டதால், விஜய் ரசிகர்கள் GOAT படத்தையும், அதற்கு அடுத்து வரும் படத்தையும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல் விஜய்யின் பிறந்தநாளன்று ஏதாவது ஒரு மாஸ் அப்டேட் வருவது வழக்கம். நேற்று இரவே படத்தின் 2வது பாடல் புரோமோ வீடியோ மற்றும் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி கவனம் பெற்றது.

அதில் டபுள் கெட்டப்பில் விஜய் அசத்தலாக பைக்கில் வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய்யின் குரலில், சின்ன சின்ன கண்கள் என்ற பாடல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான விசில் போடு பாடல் விஜய்யின் குரலில் வெளியாகி கவனம் பெற்றது. தற்போது இந்த பாடலையும் ரசிகர்கள் வைப் செய்து வருகின்றனர்.

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்: Hot Flashes என்றால் என்ன? கையாள்வது எப்படி?

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

SCROLL FOR NEXT