Names 
வெள்ளித்திரை

"என் பெயரை அவர் எடுத்துகிட்டார்": யார் பெயரை யார் எடுத்தது?

ரா.வ.பாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களைக் கொடுத்து, ரசிகர்கள் மத்தியில் நிலையான இடத்தைப் பிடிக்க இளம் நடிகர்கள் பலரும் முயற்சித்து வருகின்றனர். இந்த வரிசையில் விமல் மற்றும் வித்தார்த் ஆகிய இருவரும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் ஓரிரு நல்ல படங்களைக் கொடுத்து விட்டு, சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல் திணறுகின்றனர். இந்நிலையில் இவர்களின் பெயர் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

களவாணி படத்தின் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்தவர் விமல். சென்டிமென்ட், காமெடி மற்றும் காதல் என இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பசங்க, வாகை சூட வா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை மற்றும் போகுமிடம் வெகுதூரமில்லை போன்ற படங்கள் இவரது சினிமா பயணத்தில் வெற்றிப் படங்களாக அமைந்தன. இருப்பினும் சில தோல்விப் படங்களைக் கொடுத்ததால் இன்னமும் தனக்கான தனியிடத்தைப் பிடிக்க முடியாமல் திணறுகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான போகுமிடம் வெகுதூரமில்லை மற்றும் சார் ஆகிய இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றன.

மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் வித்தார்த். முதல் படமே வெற்றிப் படமாக அமைந்ததால், இவரின் அடுத்தடுத்தப் படங்களின் மீது எதிர்ப்பார்ப்பு இருந்தது. இருப்பினும் சரியான கதை அமையாததால் சில தோல்விப் படங்களையே கொடுத்தார். பிறகு வீரம் படத்தில் அஜித்திற்கு தம்பியாக நடித்து பெயர் பெற்றார். அதிலிருந்து தனி ஹீரோவாக இவர் நடித்தப் படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டன. காற்றின் மொழி, இறுகப்பற்று, குய்கோ மற்றும் ஆயிரம் பொற்காசுகள் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் ஹிப் ஹாப் ஆதி நடித்த அன்பறிவு படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தினார்‌. கடைசியாக வித்தார்த் நடிப்பில் அஞ்சாமை என்ற படம் வெளியானது.

சினிமாவில் வருவதற்கு முன் நடிகர்கள் மற்றும் நடிகைகள், தங்களது பெயரை ரசிகர்கள் மனதில் பதியும் படியாக மாற்றிக் கொள்வது வழக்கம். அவ்வகையில் விமல் மற்றும் வித்தார்த் ஆகிய இருவருமே சினிமாவுக்குள் நுழைவதற்கு முன் தங்களது பெயரை மாற்றி இருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் இருவரின் பெயரும் ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ஒருவர் வித்தார்த்திடம் படத்திற்காக பெயரை மாற்றிக் கொள்ளும் படி கூறியுள்ளார். நியூமராலஜி படி வி என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை வைக்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறார் வித்தார்த். அதன்படி விமல், விபின் மற்றும் வித்தார்த் என வைக்கச் சொல்லியிருக்கிறார்கள். இவர் கமலின் தீவிர ரசிகர் என்பதால், விமல் என்ற பெயரைத் தேர்வு செய்திருந்தார். ஆனால், அதற்குள் விமல் என எனது பெயரை மாற்றிக் கொண்டேன் என வித்தார்த்திடம் தகவல் தெரிவித்தார் விமல் (ரமேஷ்). இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாலும், வேறு வழியின்றி வித்தார்த் என்ற பெயரைத் தனக்கு வைத்துக் கொண்டாராம்.

சமீபத்தில் இதுபற்றி பெயர் விவகாரம் பற்றி பேசிய வித்தார்த், என்னுடைய பெயரை விமல் எடுத்துக் கொண்டார் என சிரித்தபடியே கூறினார்.

ஆந்திரப் பிரதேசத்தின் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய இனிப்பு ஆத்ரேயபுரம் பூதரெகுலு!

இந்த கண்ணாடி உங்களை தூங்க விடாது!

மஸ்குலர் டிஸ்டிராபியின் காரணமும் தீர்வும்!

நுரையீரலுக்கு நன்மை செய்யும் நொச்சி இலை பற்றி தெரியுமா?

குழந்தைகள் படிச்சதை மறக்காம இருக்க பாலோ பண்ண வேண்டிய 4 விஷயங்கள்!

SCROLL FOR NEXT