மக்களின் தளபதி விஜய் அரசியலில் நுழையப்போவது குறித்து செய்திகள் வந்ததும் எவ்வளவு பேர் சந்தோஷப்பட்டார்களோ, அதைவிட அதிகமானோர் அவர் சினிமாவை விட்டு விலகுவது குறித்து வறுத்தப்பட்டனர். அந்தவகையில், விஜயே வறுத்தப்பட்ட விஷயம் என்னவென்பது தெரியுமா?
கடந்த ஆண்டு 10வது மற்றும் 12வது வகுப்புத் தேர்வில் முதல் மூன்று இடத்தைப் பிடித்த மாணவ மாணவிகளை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்ததோடு ஊக்கத்தொகையும் வழங்கினார். இதுதான் அவர் அரசியலில் களமிறங்குவதற்கான முதல் படியாக அமைந்தது. காலை முதல் இரவு வரை அசராமல் மாணவ மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கினார்.
இது பல மாணவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. அதன்பின்னர், மழையால் பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். அதேபோல், இந்தாண்டும் மாணவர்களை சந்தித்து பரிசுப் பொருட்களை வழங்கினார்.
சினிமா பிரபலங்கள் சிலர் அவரின் கட்சியில் சேர்ந்துக்கொள்ளலாமா என்று தாமே முன்வந்து கேட்டதாகவும், அதற்கு விஜய் மலுப்பி வருவதாகவும் கூட செய்திகள் பரவுகின்றன. அந்தவகையில் நடிகை கீர்த்தி சுரேஷும் இதுகுறித்து பேசியுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 'ரகு தாத்தா' படம் அடுத்து வெளியாக இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் ப்ரமோஷன் செய்து வருகின்றனர்.
அந்தவகையில் ஒரு பேட்டியில், கீர்த்தி சுரேஷிடம் விஜய் என்ட்ரி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ரிவால்வர் ரீட்டா படம் நடித்துக்கொண்டிருந்த போது அங்கு பக்கத்திலேயே விஜய் அவர்களின் படப்பிடிப்பு நடந்து வந்தது. அந்த நேரத்தில் தான் அவரது அரசியல் என்ட்ரி தகவல் வந்தது.
உடனே அவரை சந்தித்து நானும் உங்களது கட்சியில் ஒரு Membership எடுக்கிறேன். எனக்கு மிகவும் சந்தோஷம் என்றேன். இந்த ஃபீல் எப்படி இருக்கிறது என கேட்டபோது, கடைசி படம் என்று எழுதும் போது கஷ்டமாக இருந்தது, ஆனால் சந்தோஷம்தான் என்று விஜய் சொன்னார்.” என்று கூறினார்.