Bollywood star kids in Ambani school
Bollywood star kids in Ambani school 
வெள்ளித்திரை

அம்பானி பள்ளியில் நடிக்கும் பிரபல நட்சத்திரங்களின் குழந்தைகள் யார் யார் தெரியுமா?

பாரதி

ந்தியாவின் முன்னணி தொழிலாதிபராக விளங்குபவர் முகேஷ் அம்பானி. இவர் கால்பதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். நாட்டின் முக்கியமான தொழிற்சாலைகள் முதல், ஆடை வடிவமைப்பு, சில்லறை வர்த்தம் என ஆக்டோபஸ் போல் படர்ந்திருக்கிறது அம்பானியின் கைகள்.

அனைத்து துறைகளிலும் கால்பதித்துவரும் முகேஷ் அம்பானி மும்பையில் சொந்தமாக ஒரு பள்ளி கூடம் நடத்திவருகிறார் என்பது பலரும் அறியாத விஷயம். இந்த பள்ளியில் ஆண்டுதோறும் நடைபெறும் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் நாட்டின் முக்கியமான ஷாரூகான், அமிதாபச்சன், ஐஸ்வர்யா ராய், கரினா கபூர் என முன்னணி ஹீரோ,ஹீரோயின்கள், இயக்குநர்கள், அரசியல் பிரபலங்கள் என பலர் கலந்துக்கொள்வார்கள்.

ஆனால், நீங்கள் நினைப்பது அவர்கள் பள்ளி ஆண்டு விழாவில் விருந்தினர்களாக கலந்துகொள்ள வரவில்லை. அம்பானி பள்ளியில் படிக்கும் தங்களுடைய பிள்ளைகளில் நிகழ்ச்சிகளை கண்டுகளித்து உற்சாகப்படுத்தான்.

திருபாய் அம்பானி பள்ளி 2003ம் ஆண்டு மும்பையில் தொழிலதிபர் அம்பானி கட்டிய பள்ளி. அம்பானி தனது தந்தையின் திருபாய் அம்பானி என்ற பெயரை தன் பள்ளிக்கும் வைத்தார். அம்பானியின் மனைவி நீத்தா அம்பானித்தான் பள்ளியின் தலைவர். இந்த பள்ளியில் பிரபல இயக்குனர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ஆகியோரின் பிள்ளைகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 1090 மாணவர்களும் 170 டீச்சர்களும் உள்ளனர். அம்பானி பள்ளியில் குறைந்தப்பட்ச கட்டணம் ஆண்டிற்கு 1 லட்சத்து எழுபதாயிரமாகும்.

திருபாய் அம்பானி பள்ளியில் ஐஸ்வர்யா பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யா பச்சன், பாலிவுட் நடிகர் அமிர்கான் மகன் ஆசாத் ராவ் கான், ஷாருக்கான் மகன் அப்ராம் கான், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சஞ்சய் கபூர் மகன் ஜஹான் கபூர், ரித்திக் ரோஷன் மகன்கள் ஹ்ரிதான் ரோஷன், ஹ்ரேஹான் ரோஷன் ஆகியோரும் படித்து வருகின்றனர். மேலும் கரீஷ்மா கபூர் மகன் கியான் ராஜ் கபூர், பிரபல பாடகர் சோனு நிகம் மகன் நீவான் நீகம் ஆகியோரும் அம்பானி பள்ளியில் பயின்று வருகின்றனர்.

அதேபோல், மறைந்த நடிகை ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர், சைஃப் அலிகான் மகள் சாரா அலிகான் மற்றும் மகன் இப்ராஹிம் அலிகான், ஷாருக்கான் மகள் சுஹானா கான் மற்றும் மகன் ஆர்யன் கான், கிரிக்கெட்டர் சச்சின் மகள் சாரா தெண்டுல்கர் மற்றும் மகன் அர்ஜுன் தெண்டுல்கர், கஜோல் மற்றும் அஜய் தேவ்கான் மகள் நியசா தேவ்கான்,அமிர் கான் மகள் இரா கான் ஆகியோர் திருபாய் அம்பானி பள்ளியில் படித்து முடித்தவர்கள்.

இந்நிலையில் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் பள்ளி ஆண்டு விழாவில் நடித்த நாடக வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. படிப்பில் சிறந்து விழங்கிய ஆராத்யா நடிப்பில் களமிறங்குவாரா என்ற கேள்வி எப்போதும் ரசிகர்களிடையே இருக்கும். இதுவரை ஆராத்யா எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா பச்சன் ஆகியோருடன் இணைந்து திரைப்பட நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வார். சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன் பட நிகழ்ச்சியில் ஆராத்யா கலந்துக்கொண்ட புகைப்படம் வைரலானது.

ஆராத்யா கபடி போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் மிகுந்தவர். திருபாய் அம்பானி பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஆராத்யா நாடகம் ஒன்றில் நடித்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கருப்பு நிற உடையில் வடநாட்டின் ஒரு வரலாற்று பெண் போல் தோற்றமளித்தார், ஆராத்யா. இவரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. எப்போதும் முடியை முன் விட்டிருக்கும் ஆராத்யா இந்த வீடியோவில் முழுமுகத்தையும் காண்பித்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள் ‘ஆராத்யா நெற்றியின் அறிமுக நாடகம்’ என கிண்டலடித்தும் வருகின்றனர். அதேபோல் நடிப்பில் அம்மாவை மிஞ்சிவிடுவார் போல் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆராத்யாவின் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க ஐஸ்வர்யா பச்சன், அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ஸ்வேதா பச்சன் என மொத்தம் குடும்பமே வந்திருந்தனர்.

அதேபோல் ஷாருக்கானின் இளைய மகனும் ஆண்டு விழாவில் கலந்துக்கொண்டுள்ளார். ஒரு நாடகத்தில் நடித்த ஷாருக்கானின் மகன் அப்ராம் கான் தன் தந்தைப் போலவே நடித்தார். அதனைப் பார்த்த ஷாருக்கான் ஆனந்த கண்ணிர் விடும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

மேலும் கரீனா கபூர், கரண் ஜோஹர் ஆகியோரும் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு தங்கள் மகன் மகள்களின் திறமைகளைக் காண வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT