வெள்ளித்திரை

‘பதான்’ திரைப்பட வசூலை முறியடிக்குமா 'ஜவான்'?

கல்கி டெஸ்க்

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம், 'ஜவான்'. விஜய் சேதுபதி, நயன்தாரா உட்பட பலர் நடிக்கின்றனர். தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

தமிழில் பல வெற்றி படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார். ஜவான் படத்தின் யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அட்லி இயக்கத்தில் இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஷாருக்கான் நடித்துள்ள ’ஜவான்’ படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே வசூலை குவித்து வருவதாக தகவல் வெளியாகி யுள்ளது.

இந்த படத்தை ஷாருக்கானின் மனைவி கவுரி கான் தயாரித்துள்ளார். ‘ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஓ டி டி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக புதிய தகவல் வெளியாகி யுள்ளது. இதன் காரணமாக, நடப்பாண்டில் மிகப் பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது. ஷாருக்கான் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ‘பதான்’ திரைப்படம் உலகளவில் ரூ.1,050 கோடி வசூலித்ததினை இந்த படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT