கே. ராஜன் அவர்கள் சினிமா தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். இவர் பேசுவது பரபரப்பான விஷயமாக மாறி வருகிறது. மான் வேட்டை என்ற படத்தை திருமலை இயக்கி உள்ளார். இந்த படத்தின் முன்னோட்ட விழா சமீபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய ராஜன் "இங்கே பெரிய நடிகர்களின் படம் தோல்வி அடைந்தால் தங்களின் சம்ளத்தை குறைத்து கொள்வது கிடையாது. ஆனால் நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் பெரிய ஹீரோக்கள், நமது தமிழ் நாட்டு ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்தில் இருபதைந்து சதவீகிதம் தான் சம்பளமாக வாங்குகிறார்கள்.
ஒரு வேளை படம் தோல்வி அடைந்து விட்டால் வாங்கிய சம்பளத்தில் பாதியை திருப்பி தயாரிப்பாளரிடம் தந்து என்னை நம்பி பணம் போட்டு படம் எடுத்துள்ளீர்கள் நீங்கள் மீண்டும் படம் தயாரிக்க வேண்டும் என்கிறார்கள்.
இங்கே தமிழ் நாட்டில் நிலைமை தலைகீழாக உள்ளது. தங்களது படம் தோல்வியடைந்தால் சம்பளத்தில் ஒரு சிறு பகுதியை கூட தயாரிப்பாளருக்கு ஹீரோக்கள் தருவது இல்லை.
முழு சம்பளத்தையும் செட்டில் செய்தால் மட்டுமே டப்பிங் பேசி முடிக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்றால் தயாரிப்பாளர்களிடம் ஒற்றுமை வேண்டும். மான் வேட்டை போன்ற சிறிய படங்கள் தான் சினிமாவை வாழ வைக்கின்றன"என்றார். ராஜன் பற்ற வைத்த இந்த நெருப்பு பிரகாசமாக எரியுமா? புஸ்வாணம் ஆகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.