வெள்ளித்திரை

ரஷ்யாவில் அஜித்: மோட்டார் சைக்கிளில் உலகப் பயணம்?

கல்கி

நடிகர் அஜித் நடித்து வரும்  'வலிமை'. படத்தின் சண்டைக் காட்சிகளைப் படமாக்க ரஷ்யா சென்றிருக்கிறது படக்குழு. பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாக்கும் 'வலிமை' படத்துக்கான ஷூட்டிங் ரஷ்யாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துக் கொடுத்த அஜித், ரஷ்யாவில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு உலகளாவிய பைக் பயணம் குறித்து அஜித் பரிசீலித்து வந்ததாகவும் தற்போது முதல் கட்டமாக தன் பயணத்தை  ரஷ்யாவில் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.  அஜீத் ரஷ்யாவில் மோட்டார் சைக்கிளில் சுமார் 5,000 கி.மீ. தூரம் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு 'வலிமை' படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்தபோது அங்கிருந்து சுமார் 10,000 கி.மீ. வடகிழக்கு மாநிலங்கள் வரை சாலைப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெயில் காலத்தில் எந்த வித வண்ணங்களில் உடை அணிந்தால் இதமாக இருக்கும் தெரியுமா?

“தொடர்ந்து போராடுவேன்” – தோல்வியை சந்தித்த மும்பை அணி கேப்டன் ஹார்திக் பாண்டியா!

உலகப் புகழ்பெற்ற 10 சிலைகள்!

அதிகரிக்கும் வெப்பம்… உலகமே அழியப் போகுது… எச்சரிக்கும் விஞ்ஞானிகள்! 

நமது எண்ணங்களை சீர்படுத்துவது எப்படி.?

SCROLL FOR NEXT