Sewing machine 
கலை / கலாச்சாரம்

ஒரு தலை பூட்டு தையல் எந்திரம் தெரியுமா உங்களுக்கு?

கலைமதி சிவகுரு

துணிகளை தைக்க பயன்படும் தையல் எந்திரத்தை 1790ல் தாமஸ் செயின்ட் என்பவர் கண்டுபிடித்தார். அதற்கு முன்னால் உள்ள தையல் எந்திரம் தோன்றியது எவ்வாறு என்பதை பார்ப்போம். 

பண்டைய காலத்தில் மனிதன் தன் உடலை மறைக்க தாவர இலைகளையும், விலங்குகளின் தோல்களையும், ரோமத்தையும் பயன்படுத்தி ஒழுங்கற்ற முறையில் ஆடைகளை அணிந்து வந்தான். முதல் முதலில் விலங்குகளின் தோல்களை தைப்பதற்காக கருவி ஒன்றை கண்டறிந்தனர். அக்கருவியே படிப்படியாக வளர்ச்சி அடைந்து தற்போதைய தையல் எந்திரம் தோன்றியது. 

எந்திர சாதனத்திற்கு காப்புரிமை பெற்றது:

இங்கிலாந்தில் பணிபுரியும் ஜெர்மனி மருத்துவர் சார்லஸ் ஃப்ரெடெரிக் வைசெந்தல் என்பவர் தையல் கலைக்கு உதவும் எந்திர சாதனத்திற்கான முதல் பிரிட்டிஷ் காப்புரிமையை 1755 ல் பெற்றார். அவரது கண்டு பிடிப்பு ஒரு முனையில் ஒரு கண் கொண்ட இரட்டை கூரான ஊசியை கொண்டிருந்தது. 

மரத் தையல் எந்திரம்:

1775 ல் வெய்விந்த்தாலி என்பவரால் முதல் தையல் எந்திரம் உருவாக்கப்பட்டது. இது மரத்தினால் செய்யப்பட்டது. இதனை ஊசியின் நடுவில் துவாரம் செய்யப்பட்ட மரத்தாலான தையல் எந்திரம் எனலாம். இந்த ஊசி முள்வேலி ஊசியை கொண்டிருந்தது. 

தோல் தையல் எந்திரம்:

1790 ஆம் ஆண்டு தாமஸ் செயின்ட் என்பவரால் தோல் எந்திரம் வடிவமைக்கப்பட்டது. விலங்குகளின் தோல்களைத் தைப்பதற்காக தோலில் துளைகளை துளைக்க கூடிய (தமரூசி) போன்ற சாதனத்துடன் ஒரு எந்திரத்தை உருவாக்கினார். 

1814 ம் ஆண்டில் மற்றொரு ஆங்கில கண்டுபிடிப்பாளரான ஜான் டங்கன்  ஒரு எந்திரத்தை உருவாக்கினார். இந்த எந்திரம் தான் ஊசி மற்றும் நூல் இரண்டையும் முதலில் பயன்படுத்தியது. அதன் திறன் குறைவாக இருந்ததால் தோல் மற்றும் கேன்வாஸ் மட்டுமே பயன் படுத்த முடியும். 

இரும்பு தையல் எந்திரம்:

1830ம் ஆண்டு பார்த்தடெமி  திம்மோனியர் என்பவரால் இரும்பு தையல் எந்திரம் வடிவமைக்கப்பட்டது. இது பஞ்சினால் உருவான நூலால் செய்யப்பட்ட துணியை மட்டுமே தைக்க பயன்பட்டது. 

ஒரு தலை பூட்டு தையல் எந்திரம்:

1831 ஆம் ஆண்டு வால்டர்ஹண்ட் என்பவரால் இந்த தையல் எந்திரம் வடிவமைக்கப் பட்டது. இது ஊசி மற்றும் பிணைப்பு தையலை அறிமுகப்படுத்தியது. தைக்கப்படுகின்ற துணியின் மேற்புறத்தில் ஊசியானது நூலுடன் கீழே நுழையும் போது கீழே உள்ள நூலுடன் தையல் உருவாகும் படி அமைக்கப்பட்டது. 

இலியாஸ் ஹோப் தையல் எந்திரம்:

1845 ஆம் ஆண்டு இலியாஸ் ஹோப் என்பவரால் ஃபிஷரை போன்ற தொழில் நுணுக்கங்களுடன் கூடிய புதிய தையல் எந்திரம் உருவாக்கபட்டது. வளைவான துவாரம் கொண்ட ஊசியினையும் கீழ் வழியாக நூலினை செலுத்தும் முறையையும் பயன்படுத்தினர். கையினால் தைக்கப்பட்ட முறையை விட 5 மடங்கு கூடுதலாக ஒரு நிமிடத்திற்கு 250 தையல்கள் தைக்க பயன்படுவதாக இது இருந்தது.

சிங்கர் தையல் எந்திரம்:

கி.பி 1851 ம் ஆண்டு ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஐசக் மெரிட் சிங்கர் என்பவர் மிகப்பெரிய தையல் எந்திர தொழிற்சாலையை நிறுவினார். இன்றைய தையல் எந்திரத்தின் முன்னோடியாக இவர் திகழ்கிறார். 

உஷா தையல் எந்திரம்:

உஷா தையல் எந்திரமானது 1935 ஆம் ஆண்டு ஜெ.ஜெ இன்ஜினியரிங் நிறுவனத்தாரால் இந்தியாவில் முதல் முதலாக உருவாக்கப்பட்டது.

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

சிறுகதை: பவித்ரன்!

SCROLL FOR NEXT