History of jeans 
கலை / கலாச்சாரம்

ஜீன்ஸ் பேண்ட் வரலாறு தெரியுமா?

ம.வசந்தி

ன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் அலமாரிகளில் அணிவகுத்துக் காணப்படும் உடைகளில் ஜீன்ஸும் ஒன்று. அவ்வகையில் 1860 முதல் தற்போது வரை ஜீன்ஸ் பேண்டின் நீண்ட வரலாற்றை இந்தப் பதிவில் பார்ப்போம்.

முதல் ஜீன்ஸ் பேண்ட்டைஉருவாக்கியவர்: 1860களின் பிற்பகுதியில், லெவி ஸ்ட்ராஸ் முதல் ஜீன்ஸ் பேண்ட்டை உருவாக்கினார்.1873ம் ஆண்டில் லெவி ஸ்ட்ராஸ் மற்றும் ஜேக்கப் டேவிஸ்  இணைந்து முதல் மற்றும் தற்போதைய நீல நிற ஜீன்ஸை வடிவமைத்து காப்புரிமை பெற்றனர். அதில் காப்பர் ரிவெட்டுகள் மற்றும் பலப்படுத்தப்பட்ட பாக்கெட்டுகள் இருந்தன.

ஜீன்ஸ் தயாரிப்பு: ஜீன்ஸ் தயாரிக்கப் பயன்படும் பருத்தி துணியின் பெயர்தான் டெனிம். இது பிரெஞ்சு நகரான நிம்சில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயர் பெறுகிறது. டெனிம் முன்பு ’செர்ஜ் டி நிம்ஸ்’ என்று அழைக்கப்பட்டது.

லெவி ஸ்ட்ராஸ் ‘ப்ளூ ஜீன்ஸின் தந்தை’: லெவி ஸ்ட்ராஸ் பவேரியாவிலிருந்து வட அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து சுரங்க தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்தார். அப்போது சுரங்க தொழிலாளி ஒருவர் ஸ்ட்ராஸிடம் ‘தங்க சுரங்கத்தின் கடுமையை எதிர்க்கக் கூடிய உறுதியான வேலைக் காலுறைகளை உருவாக்க முடியுமா?’ என்று கேட்டதன் பின்னணிதான் இன்றைய ஜீன்ஸ். ஸ்ட்ராஸ் ஒரு தையல்காரருடன் இணைந்து, கூடாரம் கட்டும்  கனரக கேன்வாஸ் ஒர்க் பேண்ட்களை உருவாக்கினார்.

1860களின் பிற்பகுதியில், அதே துணியில் கால்சட்டைகளை உருவாக்கத் தொடங்கினார். ‘நீல ஜீன்ஸ்’ என்பது இண்டிகோ - சாயம் பூசப்பட்ட ஜீன்ஸைக் குறிக்கிறது. அசல் 501 வடிவமைப்பு ஒரு ஜெனோயிஸ் மாலுமியிடம் இருந்து ஈர்க்கப்பட்டது. அவர் கடினமானவேலைக்குப் பொருந்தும் வகையில் விரிந்த கால்கள் கொண்ட பேக்கி கால்சட்டை அணிந்திருந்தார்.

ஸ்ட்ராஸின் ஆரம்ப காலத்தில் உருவாக்கிய கால்சட்டைகள் தடிமனான கேன்வாஸால் செய்யப்பட்டன. ஆனால், செர்ஜ் டி நிம்ஸ் எனப்படும் உறுதியான துணிக்கு மேம்படுத்தப்பட்ட பிறகு, அவை டெனிம் என்று அழைக்கப்பட்டன. ஸ்ட்ராஸ் கண்டுபிடித்தபோது டெனிம் ஏற்கெனவே பிரான்சில் பயன்பாட்டில் இருந்தது. இந்த புதிய ஜீன்ஸ் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோதிலும் 1870களில் சுரங்கம் போன்ற உடல் உழைப்பின் கடுமையைத் தாங்க முடியாமல் ஜீன்ஸின் பலவீனமான பகுதிகள் பாக்கெட்டுகளின் மூலைகளாகவும், பட்டன் பிளாக்கெட்டின் அடிப்பகுதியாகவும் இருந்தன.

சுரங்கத் தொழிலாளர்களுக்கு அதிக அளவு தங்கம் வைக்கக்கூடிய பெரிய பாக்கெட்டுகள் கொண்ட பேன்ட்கள் தேவைப்பட்டதால் பாக்கெட்டுகளின் பலவீனமான புள்ளிகளை வலுப்படுத்த காப்பர் ரிவெட்டுகளைப் பயன்படுத்தத்  தொடங்கிய லெவி, அதன்பின் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஜீன்ஸ் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு தற்போதைய நவீன ஜீன்ஸ் உருவானது.

Levi's ஜீன்ஸின் ஆதிக்கம்: 1890 முதல் 1950 வரை, லெவி ஸ்ட்ராஸ் தயாரிப்பில் தனிக்காட்டு ராஜாவாக விளங்கி, ஆரம்ப கால ஜீன்ஸ் சந்தையில் அவர் மற்ற போட்டியாளர்களை விட அதிக லாபம் பெற்றார். சுரங்கத் தொழிலாளர்கள், மரம் வெட்டுபவர்கள், கவ்பாய்ஸ், பண்ணையாளர்கள், விவசாயிகள், தொழில்துறை ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் Levi's ஜீன்ஸ் அணிவதற்கு அங்கீகாரம் பெற்றவர்கள். அவை நீடித்து உழைக்கக் கூடியதாக இருந்தது. வசதியானதாகவும் மற்றும் பராமரிப்பு செலவு குறைவானதாகவும் இருந்தது. இன்று விதவிதமான வகைகளில் இளைஞர்கள் அணியும் ஜீன்ஸ் ஒரு காலத்தில் கடின உழைப்பின் சின்னமாக இருந்ததுதான்.

சிறுகதை: லட்டு தின்ன ஆசையா? யாருக்கு?

சோறு கண்ட இடம் சொர்க்கம் - ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் விபரம் தெரியுமா?

உடலுக்கு சூப்பர் சுகம் தரும் சுக்கு பாலின் ஆரோக்கிய நன்மைகள்!

வயசானாலும் இளமையாத் தெரியணுமா? அப்போ உணவுல இதையெல்லாம் சேர்த்துக்கோங்க..

எனது மகனின் 10 வருட வாழ்க்கையை வீணாக்கியது தோனி, விராட், ரோகித்தான் – சஞ்சு சாம்சன் தந்தை முன்வைத்த பகீர் குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT