jai Vilas Mahal Palace chandelier 
கலை / கலாச்சாரம்

உலகின் மிகப்பெரிய சரவிளக்கு ஜோடி எங்குள்ளது தெரியுமா?

வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

இந்தியாவின் குவாலியர் நகரத்தில் உள்ள ஜெய் விலாஸ் மஹால் அரண்மனையில் உலகின் மிகப்பெரிய சரவிளக்கு ஜோடி உள்ளது. அது மட்டுமல்ல, இந்தச் சரவிளக்கு ஜோடியின் ஒவ்வொரு சரவிளக்கும் உலகின் மிகப்பெரிய 5 சரவிளக்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

'கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா' என்று சொல்வதைப் போல் ஒரு சரவிளக்கு மட்டுமல்ல, இரண்டு சரவிளக்குகள் ஜெய் விலாஸ் மஹால் அரண்மனையின் தர்பார் கூடத்தில் உள்ளன. இங்குதான் ராஜா தனது தர்பாரைக் கூட்டுவார்.  ஒவ்வொரு சரவிளக்கும் கிட்டத்தட்ட 3.5 டன் அதாவது 3500 கிலோ எடை உடையது. ஒவ்வொரு சரவிளக்கும் 31 அடி உயரம் உடையது. ஒவ்வொரு சரவிளக்கிலும் கிட்டத்தட்ட 250 மின் விளக்குகள் உள்ளன.

இவை இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரத்தைச் சேர்ந்த எஃப் அண்டு ஸி ஆஸ்லர் கம்பெனி(F & C Osler Company) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டன.

தர்பார் கூடத்தின் மேல் கூரையில் தங்கத்தால் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கூரைக்காக மட்டும் கிட்டத்தட்ட 58 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டது.

இந்தக் கூரையானது இந்த இரண்டு சரவிளக்குகளைத் தாங்குமா என்று பரிசோதிக்க, எட்டு யானைகள் கூரையிலிருந்து கட்டி தொங்கவிடப்பட்டன. கூரையின் தாங்கும் அளவு பரிசோதனை வெற்றி பெற்ற பின்னரே, இந்த இரண்டு பிரம்மாண்ட சரவிளக்குகள் தர்பார் கூடத்தில் தொங்கவிடப்பட்டன.

சிந்தியா ராஜாக்கள் கி.பி. 1731 முதல் கி.பி. 1947 வரை (இந்தியச் சுதந்திரம் வரை) குவாலியரை ஆண்டனர். ஜெய் விலாஸ் மஹால் அரண்மனை கி.பி. 1874 ஆம் ஆண்டு ஜெயாஜி ராவ் சிந்தியா என்ற அரசரால் கட்டப்பட்டது.‌ அப்போது இதனைக் கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் ஆனது. இதனை வடிவமைத்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லெப்டினன்ட் கர்னல் சர் மைக்கேல் ஃபில்லோஸ். 

உலகில் இந்தச் சரவிளக்கை விட சில பெரிய சரவிளக்குகள் உள்ளன. ஆனாலும் இந்தச் சரவிளக்கு ஜோடி தான் உலகத்திலேயே மிகப்பெரிய சரவிளக்கு ஜோடி என்று பெருமையைப் பெற்றுள்ளது.

உலகின் மிகப்பெரிய சரவிளக்கு ஜோடியைக் காண்பதற்கு நாம் வெளிநாடு செல்ல வேண்டாம். இந்தியாவிலேயே காண முடியும். நீங்கள் குவாலியர் சென்றால், தவறாமல் ஜெய் விலாஸ் மஹால் அரண்மனைக்குச் சென்று இந்த சரவிளக்கு ஜோடியைக் காணத் தவறாதீர்கள்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT