PARRY‘S Corner 
கலை / கலாச்சாரம்

சென்னையின் முதல் தொழிற்சாலை எது தெரியுமா?

Madras day 2023

எல்.ரேணுகாதேவி
Madras Day 2023

சென்னை நகரம் ஆங்கிலேயேர்களின் வருகைக்கு முன்பே பல்லாயிரம் ஆண்டுகள் முன்னதாகவே பரபரப்பான நகரமாக இருந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் ஆங்கிலேயேர்கள் வருகைக்கு பின்புதான் படிப்படியாக தொழில் வளர்ச்சியை நோக்கி நகரத் தொடங்கியது சென்னை.

இதன்காரணமாக அதுவரை நீடித்துவந்த மன்னர்களின் ஆட்சிமுறையும், நிலபிரபுவத்துவ முறையிலும் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. வியாபாரம் செய்வதாக கூறி சென்னை பட்டினத்தில் நுழைந்த ஆங்கிலேயேர்கள் கிட்டதட்ட 17ம் நூற்றாண்டுவரை புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே தங்கள் வியாபாரம், குடியிருப்பு, மக்களிடம் வரி வசூல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தனர்.

இதற்கிடையில் 1687ஆம் ஆண்டில் கோல்கொண்டா வீழ்ச்சியும், 1749 பிரெஞ்சு படைகள் விரட்டி அடிப்பு மற்றும் 1792ம் வருடம் மன்னர் திப்புசுல்தான் உடனான சென்னை மைசூர் போரில் ஆங்கிலேயே படைகள் வெற்றிபெற்றனர். 

திப்பு சுல்தான் வீழ்ச்சியும் தொழிற்சாலை தொடக்கமும்

திப்பு சுல்தானை ஆங்கிலேயேர்கள் வென்ற பிறகு தங்களை எதிர்க்க யாரும் இல்லை என நினைத்த ஆங்கிலேயோர் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து சென்னைபட்டினத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகள், ஆங்கிலேயே குடியிருப்புகள் போன்றவற்றை அமைக்கத் தொடங்கினார். அப்படி ஆங்கிலேயேர்களால் இந்தியாவில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்ட லெதர் தொழிற்சாலை சென்னை மயிலாப்பூரில்தான் தொடங்கப்பட்டது.

அப்போது கிழக்கு இந்திய கம்பெனியில் பணியாற்றியவர்கள் சொந்தமா தொழில் செய்யக்கூடாது என்பதால், கம்பெனியில் பணியாற்றி பல அதிகாரிகள் தங்களுடைய உறவினர்களை பலரை லண்டனில் இருந்து சென்னைக்கு அழைத்துவந்து FREE MERCHANT என்ற பெயரில் வர்த்தகத்தை தொடங்கினார்கள்.

அப்படி புனித ஜார்ஜ் கோட்டையின் மதில் சுவர்களை கட்டிய PATRIC ROW என்ற பொறியாளரின் உறவினரான தாமஸ் பாரிதான் இந்தியாவின் முதல் தொழிற்சாலையை 1805ம் ஆண்டில் தொடங்கினார்.

சென்னையின் முதல் தொழிற்சாலை

மயிலாப்பூர் சாந்தோமில் தொடங்கப்பட்ட இந்த LEITH CASTLE தொழிற்சாலையில் தாமஸ் பாரி ஒரு தோல் கிடங்கை ஆரம்பித்து லெதர் வர்த்தகத்தில் ஈடுபட்டார். பின்னர் இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறி தூர்நாற்றம் காரணமாக தன்னுடைய LEITH CASTLE தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டார் தாமஸ் பாரி. ஆனால் 217 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலையின் கட்டடம் தற்போது சென்னையில் உள்ளது.

MYLAPORE LEITH CASTLE BUILDING

LEITH CASTLE தொழிற்சாலை அமைந்துள்ள பகுதி தற்போதும் LEITH CASTLE SOUTH, LEITH CASTLE NORTH மற்றும் LEITH CASTLE CENTRE என அழைக்கப்படுகிறது. லெதர் வர்த்தகம் மட்டுமல்லாமல் இன்டிகோ சாய பட்டறை, துணி நூல், நறுமனம் பொருட்கள் விற்பனை போன்ற தொழில்களிலும் தாமஸ் பாரி ஈடுபட்டார்.

பாரிஸ் கார்னர் பெயர் வந்த வரலாறு

இதற்கிடையில் சென்னை மாகாணத்தில் கவர்ணராக இருந்த எட்வர்டு 2ம் கிளைவ் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த தனியார் நிறுவனங்களை வெளியேறும்படி உத்தரவிட்டார். இதன்படி கோட்டையின் வடக்கு பகுதியில் இருந்த பகுதியை விலைக்கு வாங்கி அங்கு தன்னுடைய நிறுவனத்தை 1801ல் தொழிற்சாலை அமைத்தார்தாமஸ் பாரி. அதாவது தற்போது சென்னை உயர் நீதிமன்றம் அமைந்துள்ள பாரிமுனை பகுதி அல்லது பாரிஸ் கார்னர்.

OLD PARRYS CORNER BUILDING

அந்த காலத்தில் இப்பகுதியில் தற்போது உள்ளது போல் சென்னை உயர்நீதிமன்றமோ, நெரிசலான போக்குவரத்தோ வணிக நிறுவனங்களோ இல்லை. சென்னையின் முனையில் தாமஸ் பாரி தொழிற்சாலை அமைத்த காரணத்தால் அப்பகுதி அன்றில் இருந்து தற்போதுவரை பாரிமுனை அல்லது PARRYS CORNER என அழைக்கப்படுகிறது.

அதேபோல் 1807ம் வருடம் தாமஸ் பாரி தொடங்கிய சர்க்கரை தொழிற்சாலையை 217 வருடங்கள் கழித்தும் தற்போதும் PARRYS SUGAR எனும் பெயரில் செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனத்தில் பங்குதாரர்களாக PUGHS, ப்ரீத்ஆப் ஆகியோரின் பெயர்களில் சென்னையில் PUGHS ROAD, BRETHAPET ROAD எனும் சாலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அட, இப்படி ஒரு முறை தயிர் பச்சடி செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க! 

பெற்றோர்கள் பெறும் விவாகரத்து; பிள்ளைகளுக்குத் தரும் தண்டனை!

ஸ்கிசோஃப்ரினியா காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்!

நீங்கள் சாப்பிடுவது தூய்மையான கோதுமையே இல்லை… உண்மைய முதலில் தெரிஞ்சுக்கோங்க!

நீங்கள் தினமும் Mouth wash பயன்படுத்துபவரா? அச்சச்சோ ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT